பக்கம்:அழகர் கோயில்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயிற் பணியாளர்கள் 223 கூட்டம் சிதறி ஓடிவிட்டது. நாச்சியார் பரிகரத்தைச் சேர்ந்த ஒரு பணியாளர் தீக்குள் வேகமாகச் சென்று உலோகத்தாலான இறை வளின் உற்சவத் திருமேனியை வெளியில் எடுத்துவந்து ஒரு இடத்தில் வைத்துவிட்டார்; பின்னர் தீப்புண்களுடன் ஓர் ஓரத்தில் குற்றுயி ராய்க் கிடந்தார். உற்சவத் திருமேனியைப் பாதுகாக்கும் பொறுப் புடைய திருமலைநம்பிகள் எனும் சோழியப் பிராமணர் அதனைக் காணாது தவித்தலைந்தார். குற்றுயிராகக் கிடந்த சாமானியரை அணுகிக் கேட்டபோது. அவர் தான் காத்து எடுத்துவந்த திரு மேனியை வைத்திருக்கும் இடத்தைச் சொன்னால், தனக்குத் திருமலை நம்பிகளின் கோயிற் பணிகளில் ஒரு பகுதியைத் தந்துவிட வேண்டு மென்று கேட்டார். தெய்வத் தண்டனைக்கும் அரச தண்டவைக்கும் அஞ்சிக்கொண்டிருந்த திருமலைநம்பிகள் அவ்வாறே தருவதாக வாக்களித்தார். குற்றுயிராகக் கிடந்த சாமானியர் திருமேனியை ஒளித்து வைத்திருக்கும் இடத்தைக் காட்டிவிட்டு உயிர் துறந்தார். அவருடைய வழியினர்க்குத் திருமலைநம்பிகள் கொடுத்த வாக்குறுநிப் படி திருமலை நம்பிகள் பணிப்பிரிவில் பங்கு கிடைத்தது. இக்கோயிலில் பணிபுரியும் இரண்டு பிரிவினரும் இக்கதையினை இன்றும் கூறுகின்றனர்.21 பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈட்டு உரையினால் சோழியம் சாமானியரைத் துன்புறுத்திய செய்தியினை அறிகிறோம். பின்ளொரு காலத்தில் தமக்கு வாய்ப்புக் கிடைத்தபோது இறுதி நோத்திலும் விரும்பும் பொருளாகச் சோழியப் பிராமணரின் பணியில் உரிமை கேட்ட செய்தி, ஈட்டு உரை தரும் செய்தியினை உறுதிப் படுத்துகிறது. உயர்வு மனப்பான்மையினால் தம்மைத் துன்புறுத் திய சோழியப் பிராமணரிடம் சாமானியப்பிராமணர் இவ்வாறு கேட்டது சோழியரின் உயர்வு மனப்பான்மையை நீக்குவதற்காகவும் இருக் காலாம்: தம்முடைய தாழ்வு மனப்பான்மையை நீக்குவதற்காகவும் இருக்கலாம். சன்னிதி பரிசாரகப் பணியில் இக்கோயிலில் னியரும் பணியாற்றுவது இன்று நடைமுறை உண்மையாகும். 10. 13. பண்டாரி குடும்பத்தார் இறைப்பற்று : சாமா இக்கோயிலில் திருமாலை கட்டும் பணியினையுடைய ‘பண்டாரி' எனும் பணிப்பிரிவினர், 'சாத்தாணி எனப்படும் சாதினர், 'சாத்தாத வர் களுவும் இவர்கள் வழங்கப்பெறுவர். பிராமணர்க்குரிய பூணூலைச் சாத்,"வர் என இதற்குப் பொருளாகும். இவர்களுடைய முன்னோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/230&oldid=1468104" இலிருந்து மீள்விக்கப்பட்டது