பக்கம்:அழகர் கோயில்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

230 அழகர்கோயில் சமதளமாக்கப்பட்டுள்ளது; மதிலுக்கு வெளிப்புறப்பகுதி சரிவாகவே உள்ளது. எனவே ராஜகோபுரத்தின் கீழ், மதிலுக்கு உட்பட்ட பகுதியைவிட வெளிப்பகுதி பதினைந்து அடி பள்ளமாகவுள்ளது. எனவே இப்பகுதியில் பதினெட்டுப்படிகள் அமைப்பதற்குப் போது மான இடமுள்ளது: 11.4. கதவை அடைத்த கதை : இக்கோபுர வாசல் அடைக்கப்பட்டது குறித்து மக்களிடத்தில் ஒரு கதை வழங்கிவருகிறது: "ஒரு காலத்தில் மலையாளத்திலிருந்து பதினெட்டு லாடர்கள் இக்கோயில் இறைவனின் 'களை'யைத் (இறைவனின் அருளொளி spritual essence) திருடிச்செல்லத் திட்டமிட்டு வந்தனர். அவர்கள் மந்திர தந்திரங்களில் கைதேர்ந்தவர்கள். ஒரு மந்திர மையைக் கண்ணில் தடவிக்கொண்டால் அவர்கள் பிறர் கண்ணுக்குத் தெரிய மாட்டார்கள், அந்த மையைத் தடவிக்கொண்டு அவர்கள் கோயி லுக்குள் புகுந்துவிட்டனர். இரவு நேரங்களில் கருவறையிலுள்ள இறைவனின் களையை மந்திர வலிமையால் இறக்கித் தாங்கள் கொண்டுவந்திருந்த குப்பத்துக்குள் அடக்கிவிடுவர். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாகச் சிலநாட்கள்வரை இறைவனின் களையை இறக்கிக்கொண்டே வந்தனர் இறைவன் ஒருநாள் கோயில் பட்டரின் கனவில் தோன்றி, இச்செய்தியைத் தெரிவித்துவிட்டார். பட்டரும் மறுநாள் தாட்டார்களைத் திரட்டி இச்செய்தியைச் சொன்னார். அனைவரும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினர். அதன்படி மறுநாள் பட்டர் வழக்கம்போல் கருவறையைத் திறந்து பூசைகளைச் செய்து, பின் மிக அதிகமாக ஆவி பறக்கும் சுடுசோற்றை இறைவனுக்குப் படைத்துவிட்டு வெளியில்வத்துத் தீடீரெனக் கதவை வெளிப்புற மாகப் பூட்டிவிட்டார். சுடுசோற்றிலிருந்து எழும்பிய ஆவி மந்திரக்காரலாடர்களின் கண்ணிலிருந்த மையைக் கரைத்துவிட்டது. இப்பொழுது அவர்கள் பிறர் கண்ணுக்குத் தெரியும்படி ஆனார்கள். கோயிலைச் சுற்றி முன்னரே தயாராக இருந்த நாட்டார்கள் கதவைத் திறந்து பதினெட் டூப்பேரையும் பிடித்துக்கொண்டார்கள். வெளியில் கொண்டுவந்து பதினெட்டுப்பேரையும் வெட்டி அவர்கள் தலைகளைக் கோயில் கோபுரவாசல் அடியில் புதைந்துவிட்டனர். அவர்களோடு துணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/237&oldid=1468118" இலிருந்து மீள்விக்கப்பட்டது