பக்கம்:அழகர் கோயில்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதினெட்டாம்படிக் கருப்பசாமி 231 யாக வந்திருந்த கருப்பசாமி என்ற தெய்வம் மட்டும் 'என்னை விட்டு விடுங்கள். நான் இந்தக் கோபுரவாசலில் இருந்து இனிமேல் இக்கோயிலைக் காவல் காத்துக்கொண்டிருக்கிறேன்' என்று கெஞ் சியது. அதை மட்டும் அப்படியே விட்டுவிட்டனர். 11. 5. கதையின் வேறுபாடு : மக்களிடம் பரவலாக வழங்கிவரும் கதை இது. ஆவி எழும்புவ தற்காகப் பட்டர் சோற்றுக்குப் பதிலாக, சோற்று வடிநீரைக் கொட்டினார் என்று சிலர் கூறுகின்றனர். இதைத்தவிர இக்கதை மக்களிடத்தில் மாறுபாடின்றியே வழங்கிவருகிறது. கே. என். ராதாகிருஷ்ணனும் இக்கதையை இவ்வாறே குறிப் பிடுகின்றார். 'ஸ்ரீகள்ளழகர் கோயில் வரலாறு' நூலும் இக்கதையை மாறுபட்ட இவ்வாறே குறிப்பிடுகின்றது. வழக்கு மரபுக்கு தாக ஒரேஒரு செய்திமட்டும் இவ்விரண்டு நூல்களிலும் உள்ளது. *பதினெட்டு லாடர்களும் ஓர் அரசனால் ஏவப்பட்டு வந்தனர்‘ என்பதே அதுவாகும். ஆனால் இது குறித்த விளக்கம் எதும் தரப் படவில்லை. 11.6. கதைப்பாடலும் செய்தியும் : மொட்டையக்கோன் என்பவரால் இயற்றப்பட்ட 'பதினெட் டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு' என்னும் சிறிய கதைப் பாடல் ஒன்றை வர்ணிப்பாளர்கள் பாடிவருகின்றனர்.11 வாய்மொழிச் செய்திகளின்படி இவ்வர்ணிப்பு ஆசிரியர் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவரெனத் தெரிகிறது. மக்களிடையே வழங் கும் கதையினையே இவ்வர்ணிப்பும் கூறினாலும் சில செய்திகள் வேறுபடுகின்றன. 1. பட்டரின் கனவில் இறைவன் ஒரு 'கேளிக் கைத் தாதனைப்' போல் தோன்றினார்.132. சூடான தளிகையிட்டு, ஆவிபறக்கச் செய்து, லாடர்களின் நெற்றிப்பொட்டு வோவையில் கரைந்துபோகச் செய்யும் உத்தியினையும், திருடர்களைப் பிடித்துக் கோயில் கோபுரவாசலில் வெட்டிப் புதைக்க வேண்டும் என்பதனையும் இறைவனே பட்டரின் கனவில் கூறினார்.13 3, வெட்டப்படும் முன்னர் பதினெட்டு லாடர்களும், 'எங்களுக்குமலைக்காட்டுத் தீர்த்தம், காட்டுத் துளசி, கரிப்பத்துச்சோறு, இறைவன் போட்டுக் கழித்த மாலை-இவற் றைச் சந்திர சூரியர் உள்ளவரை படையலாகக் கொடுத்து ரட்சிக்க வேண்டும்' என்று வரம் கேட்டனர்.14 4. திருடர்களை வெட்டிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/238&oldid=1468112" இலிருந்து மீள்விக்கப்பட்டது