பக்கம்:அழகர் கோயில்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

232 அழகர்கோயில் புதைத்து வந்த நாட்டாருக்குப் பட்டர், மாலை, சந்தனம் மரியா தைகளை வழங்கினார்.5 5. திருடர்களை வெட்டிப் புதைத்து விட்டு, நாட்டாரும் பட்டரும் சென்றபின்னர் அவர்களுடன் வந்த கருப் பசாமி எனுந் தெய்வத்தை இறைவன் அழைத்து, 'இன்று முதல் நீ பதினெட்டுப் பேருக்கும் முன்னோடியாகவும், பாதுகாவலனாகவும் இரு. பின்னர் ஒரு காலத்தில் மறைவுமைக்காரனை உங்கள் கூட்டத் தைவிட்டுப் பிரிப்பேன். அப்போது நீ ஒரு படிக்குப் பாத்திர னாவாய். இங்கு வரும் உயிர்ப்பலிகளை வாங்கிப் பசியாறிக் கொள் என்று கூறினார். 18 11.7. கதைப்பாடல்-விளக்கம் : 1. லாடர்கள் மலையாளத்திலிருந்து வந்தவர்கள் என்று வழக்கிலுள்ள கதை கூறுகிறது. கதைப்பாடலோ 'வடக்கே வெகு தூரம் அயோத்தி நாட்டில்' இருந்து வந்தவர்கள் எனத் தொடக் கத்தில் கூறிவிட்டு, இறுதியில் லாடர்களுடன் வந்த தெய்வத்தினை மலையாளம் வாழ் கருப்பே எனக் குறிப்பிடுகிறது. என்வே அயோத்தி நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பது ஆசிரியர் கற்பனை எனக் கொள்ளத்தகும். 2. கதைப்பாடல் லாடர்கள் பதினெட்டுப்பேரையும் வகைப் படுத்த முயல்கிறது. "சரம்பார்ப்பவ னொருவன் பச்சிபார்ப்பவ னொருவன் தகடுபார்ப்பவ னொருவன் மறவுமைக்கார னொருவன் சூனியமுதல் செய்யும் மாரணக்கார னொருவன் மந்திரக்காரர் சிலர் எச்சன் தந்திரக்காரர் சிலர் ஏவுதல்செய்வோர் பந்தபாசமறுத்து சித்தர் நால்களெல்லாம் பார்ப்போர் சிலபேர்கள் வந்தபிணியைத் தீர்ப்போர் பண்டுவக் காரருடன் மறவுநூல் கற்றோர் சிலர் இந்த விதமாகத்தான் பதினெட்டுப்பேரும் இருந்தனர் என்கிறது.18 3. வந்த லாடர்களின் நோக்கம்பற்றி வழக்கிலுள்ள கதையில் இல்லாத ஒரு செய்தி கதைப்பாடலில் காணப்படுகிறது. லாடர்கள் இறைவனின் களையை இறக்கினர்' என்ற செய்தியைப் பிற்பகுதியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/239&oldid=1468113" இலிருந்து மீள்விக்கப்பட்டது