பக்கம்:அழகர் கோயில்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதினெட்டாம்படிக் கருப்பசாமி 233 சொன்னாலும், முதலில் 'பாரோர்க்கும் தெரியாதபடி எங்கே பொருளிருந்தாலும் பார்த்தெடுத்து வருவோமென்று,லாடர்கள் புறப் பட்டு வந்ததாகச் சொல்கிறது. நாடெல்லாம் சுற்றி வந்தபின் சித்தநூல் கற்றவன், அழகர்கோயிலில், கொப்பரை கொப்பரையாகத் தனமிருக்கு தென்று கூறினாரகத்தியரும் என்று கூறுகிறான்.:0 4. இந்நிகழ்ச்சி நடந்தகாலத்தில் பணிபுரிந்த பட்டரின் பெயர் பரமசாமிப்பட்டர் என்பதும், அவர் பொய்கைக்கரைப்பட்டி கிராமத்தில் குடியிருந்தார் என்பதும் கதைப்பாடல் தரும் புதிய செய்திகளாகும். 26 5. பட்டர் ஆவி மிகுதியும் பறக்கவேண்டி, 'காரம் மிகுந்த ரசத்தையும் தாராளமாக ஊற்றினார், என்றும் கதைப்பாடல் குறிப் பிடுகிறது. 22 11.8. கதையும் கதைபாடலும்-சில முடிவுகள் : 4 மக்கள் வழக்கிலுள்ள கதையும், மேற்குறித்த கதைப்பாடலும் நமக்குத் தரும் முடிவுகள் இவையே : 1. இக்கோயிலில் திருடவந்த பதினெட்டுப்பேரும் தமிழ் நாட்டினால்லர். எனவேதான் 'மலையாள நாட்டவர்' என்று வழக்கு மரபும், 'அயோத்தி நாட்டவர்' என்று தொடக்கத்தில் பாடலும் குறிப்பிடுகின்றன. கதைப் 2. வந்தவர்கள் படையெடுத்து வந்தவர்களுமல்லர். அவர்க ளின் சிறிய எண்ணிக்கையும், அவர்கள் தந்திரமாகக் கோயிலுக்குள் நுழைந்ததும் அவர்களை ஒரு திருட்டுக் கூட்டத்தார் என்று எண்ணத் தூண்டுகின்றன. 3. தளிகையிலிருந்து ஆவி எழுத்து அணிந்திருந்த மையக் கரையச் செய்தது' என்னும் கதைப்பகுதி, பதினெட்டுப்பேரும் தத் திரமாகப் பிடிக்கப்பட்டனர் என்பதையே உணர்த்துகிறது. கோயி லுக்கு வெளியே நாட்டார் பெருங்கூட்டமாயிருந்து அவர்களை மாடக் கியிருத்தல் வேண்டும். எனவே தப்பிக்கும் முயற்சிக்கோ டையிடவோ அவர்களுக்கு வாய்ப்பில்லை. 4. இறைவனது சண் 'அருட்களை' யினை இறக்கினர் என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/240&oldid=1468114" இலிருந்து மீள்விக்கப்பட்டது