பக்கம்:அழகர் கோயில்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதினெட்டாம்படிக் கருப்பசாமி 235 திருமாலைகளைக் கொண்டுவந்து சார்த்திப் படைப்பது இல்லை. கேயில்களில் உயிர்ப்பலி தருவது சட்டப்படி தடைசெய்யப்பட்டபின், அடியவர்கள் வெளிக்கோட்டைப் பகுதியில் தாங்கள் திருவிழாவுக்கு வரும் வண்டிகளின் கீழேயே ஆடுகளை வெட்டிப் பலிகொடுத்து விடுகின்றனர். பதினெட்டு லாடர்களும் அன்றாடம் இறைவன் போட்டுக் கழித்த மாலையினையும், காட்டுத் துளசியையும். கானகத்துத் தீர்த்தத்தையும் கேட்டதாகவும், கோயிலுக்கு வரும் ஆடு, கோழி, சேவல் முதலான உயிர்ப்பலிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கருப்ப சாமியீடம் இறைவனே கூறியதாகவும் 'பதினெட்டாம்படிக் கருப்பள் உற்பத்தி வர்ணிப்பு' கூறுகின்றது. 2 ஆடிமாத அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கருப்பசாமி சன்னிதியில் கதவுகளுக்குச் சந்தனம் பூசுவதை வருணிக்கும் நாட்டுப் பாடலும், காட்டுத் துளசியும் கானகத்துத் தீர்த்தமும் கரிப்பத்துச் சோறும் கள்ளழகனுக்குப் போட்டுக் கழிச்ச காஞ்சசுதம்பமும் கடைசிவரை தாரேனென்று' இறைவன் கூறியதாகப் பாடுகிறது. இச்சன்னிதிமுன் சாமியாடிகளுக்கு 'மருள்' இறங்குகிறது. இடுப்பில் கட்டியுள்ள மணி குலுங்க, கையில் தாங்குலிக் கம்புடன் அல்லது மூங்கிற்பிரம்புடன் சாமியாடுகின்றனர். சில சாமியாடிகன் தங்களைச் சாட்டையால் அடித்துக்கொள்கின்றனர். கோயில்களில் உயிர்ப்பலித் தடைச்சட்டம் வருமுன்னர் கருப்ப சாமி சன்னிதிமுன் ஆடுகள் வெட்டப்பட்டன. தற்போது வெளிக் கோட்டைப் பகுதியில் வெட்டப்படுகின்றன. அடியவர்கள் கத்தி, சுக்குமாந்தடி (கதை) முதலிய ஆயுதங்களையும், சிலர் புதிய செருப் புக்களையும் தருகின்றனர். கருப்பசாமிக்குத் தனித்திருவிழா ஏதுமில்லை. ஆடி மாதம் அமாவசை, பௌர்ரைமி நாட்களில், மதுரையைச் சேர்ந்த இடையர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/242&oldid=1468125" இலிருந்து மீள்விக்கப்பட்டது