பக்கம்:அழகர் கோயில்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதினெட்டாம்படிக் கருப்பசாமி 237 சத்தியப் பிராமணம் செய்யும் வழக்கம் தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் ஆத்தூர் அருகே ஆறுமுக மங்கலம் சுடலைமாடன் கோயிலிலும், சேரன்மாதேவிக்கு அருகில் பத்ம நேரி பிளவாக்கல் இசக்கிஅம்மன் கோயிலிலும், முகவை மாவட்டத்தில் சிவகங்கையருகே கொல்லங்குடி காளியம்மன் கோயிலிலும், மதுரை மாவட்டத்தில் கருமாத்தூர் மூணுசாமி கோயிலிலும் இவ்வழக்கம் நடைபெறுகிறது. 'தலை தொட்டேன் தண்பரங்குன்று' எனத் தலைவன் தலை யிலிட்டு ஆணை சொல்வதனைப் பரிபாடலில் காணலாம்.31 பொய்ச் சாட்சி சொன்னவர்களைப் புடைத்துண்ணும் சதுக்கப்பூதம் புகாரிலி ருந்ததைச் சிலம்பு காட்டும்.22 'வாய்மை தவறாமை' எனும் பண் பினைத் தெய்வங்களோடு சார்த்திக் காக்கத் தமிழர் முற்பட்டிருக் கின்றனர். அம்மரபு வழியிலேயே கருப்பசாமியின் முன்னும் பிர மாணம் செய்யும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. 11.12. நிகழ்ச்சி நடந்த காலம் : இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் ஒன்றில்கூட இக் கோபுரவாசல் அமைக்கப்பட்ட நிகழ்ச்சி பற்றிக் குறிப்பு இல்லை. அடைக்கப்பட்ட கோபுரவாசலில் காணப்படும் கல்வெட்டுக்களில் காலத்தால் பிந்தியது சகம் 1530 இல் (கி. பி. 1608இல்) பொறிக்கப் பட்ட சதாசிவராயர் கல்வெட்டாகும். 33 அக்காலம் வரை இவ்வாசல் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஏனெனில் மக்கள் நடமாடும் இடங்களில் அவர்கள் பார்வையில் படும்படிக் கல்வெட்டுக்களைப் பொறிப்பதே வழக்கம். எனவே இந்நிகழ்ச்சி கி. பி. 1608 க்குப் பின்னரே நடைபெற்றிருக்க முடியும். கி.பி.1709 இல் தரப்பட்ட வெள்ளையத்தாதர் வீட்டுப் பட்டய நகல் அலையில் ‘பதினெட்டாம்படி வாசல்' என்ற தொடர் காணப் படுவதால், அதற்கு முன்னர் இந்நிகழ்ச்சி நடைபெற்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. எனவே கி.பி.1608 க்கும் கி.பி. 1769 க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் இந்நிகழ்ச்சி நடைபெற்றிருக்க வேண்டும். இந் நிகழ்ச்சி நடந்த காலத்தில் மதுரையில் ஆண்ட மன்னர் பெயரினைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/244&oldid=1468116" இலிருந்து மீள்விக்கப்பட்டது