பக்கம்:அழகர் கோயில்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பனெட்டாம்படிக் கருப்பசாமி 239 பிரத்தியும்ந அநிருத்த வழிபாடு நிகழ்ந்ததற்கான கல்வெட்டுச் சான்று கள் இல்லை என்கிறார். 3' வாசுதேவ சங்கர்ஷண வழிபாடே அக்காலத் தில் பெரிதும் பரவியிருந்தது என்பது அவர் கருத்தாகும். தமிழிலக்கியத்தில் வியூகவாதக் கொள்கையைப் பரிபாடலே நமக்கு முதலில் அறிமுகப்படுத்துகிறது. வாகதேவன், சங்கர்ஷணன், பிரத்தியும்நன், அநிருத்தன் ஆகிய பெயர்களைக் கடுவளிளவெயி னனார் தமது பரிபாடலில் தமிழாக்கித் தருகின்றார். செங்கட்காரி கருங்கண் வெள்ளை பொன்கட் பச்சை பைங்கண் மாஅல்' 36 என முறையே நான்கு வியூகங்களின் பெயர்களையும் தமிழாக்கம் செய்கிறார். கிருஷ்ணன், வாசுதேவகிருஷ்ணன் என அழைக்கப் பெறுவதும் உண்டு. 39 வாசுதேவன் என்ற பெயரினைக் 'காரி' (கரிய நிறமுடையவன்) என்று தமிழாக்கம் செய்கிறார் கடுவனிள வெயினனார். புறநானூற்றின் 353ஆம் பாடலைப் பாடிய புலவரின் பெயர் 'காரிக்கண்ணனார்' என்பதாகும். 'வாசுதேவ கிருஷ்ணன்' என்பது காரிக்கண்ணன் எனத் தமிழில் மக்கட்பெயராக வழங்கிய தனை இதனால் அறியலாம். 'சங்கர்ஷணன்' என்ற சொல்லுக்கு 'நல்லுழவன்' என்பது பொருளாகும். இருப்பினும் சங்கர்ஷணனுடைய நிறம் வெள்ளை யாதலால் 'வெள்ளை' என்றே அப்பெயரைத் தமிழாக்கம் செய்கிறார். பிரத்தியும்நன் என்ற பெயரைப் 'பச்சை' என்றும், அதிருத்தன் என்ற பெயரைக் 'கரியவன்' என்ற பொருளுடைய 'மாஅல்' என்றும் மொழிபெயர்க்கின்றார். கால்நடை வளர்ப்போர் நிறத்தைக் கொண்டும் கொம்பு, காது, வால் முதலிய உறுப்புக்களைக் கொண்டும் மாடுகளுக்குப் பெயரிட்டு இனங்காண்பது வழக்கம். திருமால் வழிபாட்டினராகிய ஆயர்கள் கருப்புநிறமுடைய மாட்டினைக் காரி என்றும் வெள்ளை நிறமுடைய மாடுகளை நுண்பொறி வெள்ளை, பொற்பொறி வெள்ளை, தூநிற வெள்ளை எனக் குறியும் நிறமும் கொண்டு பெயரிட்டழைந்த செய் தியினைச் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். 0 இளங்கோவடிகள் காலத்திலும் தமிழ்நாட்டில் காரி கோயிலும், வெள்ளை கோயிலும் தனித்தனியே இருந்தன. இருப்பினும் திரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/246&oldid=1468120" இலிருந்து மீள்விக்கப்பட்டது