பக்கம்:அழகர் கோயில்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

240 அழகர்கோயில் மாலை ஒரு கடவுளாகக் கொண்டு பாடும்போது, 'திருவடியும் கண்ணும் திருவாயும் செய்ய கரியவன்' என்றே அவர் குறிப்பீடு கின்றார்.41 *கண்ணன் என்னும் கருந்தெய்வம்' என்பது ஆண் டாளின் பாசுரமாகும். 42 வியூகக்கொள்கை தமிழ்நாட்டுக்கு அறிமுகமானபின், திரு மால் கரிய திருமேனியினையுடைய அழகனாகவே கருதப்பட்டான். கருப்பு, சிவப்பு ஆகிய நிறவேறுபாடுகள் அக்காலச் சமூக அழகு ணர்ச்சியைப் பாதித்ததாகத் தெரியவில்லை. கருமை அழகுமிகுந்த ஒரு திறம் என்றே தமிழர்கள் கருதியிருக்கின்றனர். பதின்மூன் றாம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்றில், 'கரியமால் அழகனான உத் தமளிழுப்பரையன்' என்றொரு பெயரினைக் காண்கிறோம். 43 பிற்கா லத்து எழுந்த (சுமார் 18ஆம் நூற்றாண்டு) அழகர்மாலை ஆசிரியர், 'கருமை அழகுக்குறையுள் என்றான்றோர் கருதுகின்றார்' என்பர்.4 நன்னூல் விருத்தியுரையாசிரியரும், 'கருப்பின்கண் மிக்குள்ளது அழகு' எனக் கூறுவதால் இக்கருத்துமரபு அவர் காலம்வரை வாழ்ந்ததெனக் கருதலாம். 45 காரி என்ற பெயர் 'கருப்பு நிறமுடையவன் 'என்ற பொருளைத் தந்தாலும் கருப்பன் அல்லது கருப்பசாமி என்ற பெயரினைச் சங்க இலக்கியங்களிலோ, சிலப்பதிகாரத்திலோ, ஆழ்வார்கனின் பாசுரங் களிலோ காணமுடியவில்லை. முதலாம் இராசராசனின் தஞ்சைக் கோயில் கல்வெட்டொன்றில், 'கருப்பன் கண்டன்' (கருப்பன் மகன் கண்டன்) என்ற பெயரினைக் காண்கிறோம்'" இப்பெயர் வழக்குக் குறித்த முதற் சான்றாக இதனையே கொள்ளமுடிகிறது. கரியமாணிக்கம் என்றொரு பெயர், திருமாலுக்கு வழங்கி வந்த தனைக் கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. எழுத்தமைதிகொண்டு கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டினதாகக் கருதப்பெறும் நெல்லை மாவட்டத்துச் சீவலப்பேரி பெருமாள்கோயில் வட்டெழுத்துக் ல்வெட்டு, கிழ்களக் கூற்றத்து தென்திருமாலிருஞ்சோலை நின்ற ருளிய கருமாணிக்கதெவர்" என அக்கோயில் இறைவனைக் குறிப் பிடும். கி.பி.1509 இல் எழுந்த குமரி மாவட்டத்துக் கரியமாணிக்க புரம் கரியமாணிக்காழ்வார் கோயிற் கல்வெட்டால், அக்கோயில் பதினாறாம் நூற்றாண்டில், 'கரியமாணிக்க விண்ணஹர்" அழைக்கப்பட்ட தனை அறியலாம்.42 திருச்சி மாவட்டத்தில் லால் என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/247&oldid=1468121" இலிருந்து மீள்விக்கப்பட்டது