பக்கம்:அழகர் கோயில்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 அழகர்கோயில் பகுதியாவன. ஆனால் அவர் குறிப்பிடும். பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள குகை, கோயிலிலிருந்து ஒரு. மைல் தொலைவில் அமைந்துள்ளது. எனவே அதனைக் கோயிற் பரப்பின் பகுதியாகக் கொள்ளவியலாது. 2.4. முதற்சான்று - 'ஆராமம்': தம் கருத்துக்கு ஆதரவாகச் சீனி. வே. தருகின்ற முதற்சான்று. கோயிலையடுத்த குளம் ஆராமத்துக்குளம் என வழங்கப்படுவது ஆகும். இவ்வழக்கு மரபு உண்மையே. இவ்வழக்கினை ஆய்வா ளர் பலமுறை கேட்டும் வாய்ப்புக் கிடைத்தது. ‘ஆராமம் என்பது தமிழ்ச் சொல் இல்லை. இது பாலிமொழிச் சொல். பௌத்த சங்கத்துக்குரிய குளம் உடைய நந்தவனத்தினை இச்சொல் குறிக் கும்' எனச் சீனி. வே. ஆய்வாளரிடம் வீளக்கினார் 10 ‘ஆராமம்’ என்ற சொல்லுக்கு, 'தோட்டம்', 'புறச்சோலை' என்றும், *ஆராமஞ் சூழ்ந்த அரங்கம்' என்ற தொடருக்கு. 'மற்றைய கோயில்களால் சூழப்பட்ட அரங்கம்' என்றும் நாலாயிர திவ்வியப் பிரபந்த அகராதி பொருள் கூறுகின்றது 11 எனவே, 'ஆராமம்' என்ற சொல் நோட் டமும் சோலையும் கோயிலும் இணைந்த ஒரு பகுதியினைக் குறிப் பதாகக் கெ.ள்ளலாம். பௌத்த சங்கத்தாரைப் பற்றி எழுதும் உ. வே. சாமிநாதை யர், "பிக்ஷசிக்களுக்கு ஏதேனும் குற்றம் நேரிடுமாயின் அதற்குப் பரிசுாரம் நந்தவனத்துக்கு நீரிறைக்கையென்று தெரிகிறது. இதளை 'பிக்ஷஅணிகளுக்குப் பிழை புகுந்தாற் பிராயச்சித்தம் புத்தர் கோயில் முற்றந்துக்கு மணற்சுமக்கை; பிக்ஷ9க்களுக்குப் பிராயச்சித்தம் நந்தவனத்துக்கு நீரிறைக்கை' (நீலகேசி - அருக்கசந்திரவாதச் சருக்கம் 25 ஆம் பாட்டுரை) என்பதினாலுணர்க எனச் சான்று காட்டி எழுதுவர் 2 எனவே, சீனி. வே. கூற்றுப்படி குளம் உடைய நந்தவனங்கள் புத்தர் கோயில்களில் இருந்த செய்தி தெளிவா கின்றது. 2.5. இரண்டரவது சான்று - 'தலவிருட்சம்': சீனி. வே. கூறும் அடுத்த சான்று, இக்கோயிலின் பழைய தலவிருட்சங்களில் அரச (போதி) மரமும் ஒன்று என்பதாகும். இக் கோமிலுக்கு யுகத்திற்கொன்றாக நான்கு யுகங்களில் நான்கு தல விருட்சங்கள் உண்டு எனும் செய்தியை அழகர் குறவஞ்சி. சோலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/25&oldid=1467880" இலிருந்து மீள்விக்கப்பட்டது