பக்கம்:அழகர் கோயில்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

250 அழகர்கோயில் நான்காவது இயலில் தமிழ்நாட்டில் வைணவக் கோயில்களில் இக்கோயிலுக்குச் சிறப்பாக அமைந்த ஆண்டார் - சமயத்தார் அமைப்பு முறை விளக்கப்பட்டுள்ளது. கள ஆய்வின் மூலம் வெளிப் படுத்தப்பட்ட இந்த அமைப்புமுறை காலமாற்றங்களின் காரணமாக இன்று பெருமளவு சிதைந்து நிற்கிறது. சமய அறிவும், தத்துவ ஞானமும் உடைய 'உயர்ந்தோர்', பக்தி உணர்ச்சியை மட்டுமே கொண்ட நாட்டுப்புற மக்களைத் தங்கள் அணியில் இணைத்துக் கொள்வதற்கு ஆண்டார்-சமயத்தார் அமைப்புமுறையை உருவாக் கினர். கடந்த நூற்றாண்டுவரை நாட்டுப்புற மக்களுக்கும் இப் பெருந்தெய்வக் கோயிலுக்கும் இடையேயான உறவினை வளர்ப் பதிலும் காப்பதிலும் இந்த அமைப்பு பெரும்பணியாற்றியுள்ளது. ஐந்தாவது இயலில் அழகர்கோயில் சமூகத்தோடு கொண்டி ருந்த உறவு கள்ளர், இடையர். அரிசனர், வலையர் ஆகிய சாதி யாரை முன்னிறுத்தி ஆராயப்பட்டது. திருமாலடியார் என்ற அளவில் இடையர் இக்கோயிலோடு உறவு கொண்டனர். இந்திரனை வழி பட்டிருந்த தமிழ்நாட்டு உழவர்களைப் பலராம வழிபாட்டுக்குத் திருப்பத் தமிழ்நாட்டு வைணவம் முயன்றது. பாண்டிய நாட்டில் அழகர்கோயிலில் நிகழ்ந்த பலராம வழிபாடு உழவர்களை வைண வத்திற்குள் ஈர்க்கப் பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில் பலராப் வழிபாடு திருமால் வழிபாட்டில் கலந்து மறையவே பலராம வழி பாட்டினரான உழவர்கள் திருமாலை வழிபடுவோராக வைணவ சமயத்துக்குள் நிலைபெற்றுவிட்டனர். தமிழ்நாட்டில் அழகர்கோயில் மட்டுமே உழவர்களை வைணவ சமயத்தில் நிறுத்தும் முயற்சியில் வெற்றிபெற்றது. அழகர் கோயிலுக்குக் கிழக்கேயுள்ள நிலப்பகுதியில் வாழ்ந்த நாட்டுக்கள்ளர் போர்க்குணம் மிகுந்த சாதியாராவர். சொத் துடைமை நிறுவனமான கோயில் தன்னைக் காத்துகொள்வதற்கு இவ்வினத்தாரோடு உறவு கொண்டது; அவ்வுறவுக்கு ஆன்மீக வண் ணமும் தந்தது. எனவே கோயிலுக்கும் கள்ளர் சமூகத்தார்க்கும் எற்பட்ட உறவு சமூக அழுத்தங்களினால் உருவானதாகும். எனவேதான் கள்ளர் சாதியார் வைணவ சமயத்தில் இடையரைப் போலவும் அரிசனரைப் போலவும் போதுமான ஈடுபாடு காட்டாது போயினர். அழகர்கோயிலுக்கும் வலையருக்கும் ஏற்பட்ட உறவு, சமூக அழுத்தங்களின் காரணமாக வலையரே ஏற்படுத்திக்கொண்ட உறவாகும். உறவு நாடிவந்த வலையரைக் கோயில் கள்ளர்களைப் போல விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை; ஆனால் புறந்தள்ளவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/257&oldid=1468134" இலிருந்து மீள்விக்கப்பட்டது