பக்கம்:அழகர் கோயில்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முடிவுரை 251 இல்லை. வாழும் நிலப்பகுதியால் கோயிலுக்கு அருகிலிருப்பதே வலையர் கோயிலோடு உறவுகொள்ளக் காரணமாயமைத்தது. ஆறாவது இயலில் அழகர்கோயில் திருவிழாக்கள் ஆராயப் பட்டன. இவ்வியலில் இக்கோயிலின் திருவிழாக்களில் பெரும்பாலான சமூகத் தொடர்பின்றி அமைவது விளக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புற அடியவர்கள் பங்கு கொள்ளும் திருவிழாக்களே இக்கோயிலில் சிறப் பாகவும், சமூகத் தொடர்பைக் காப்பனவாகவும் அமைகின்றன. தேரோட்டத்திருவிழாவும், வேடுபறித்திருவிழாவும் கள்ளா சாதியா ரோடு இக்கோயில் கொண்டுள்ள உறவினை விளக்குவநோடு அவ்வுறவினைக் காப்பதாகவும் அமைத்துள்ளது. ஏழாவது இயலில் சித்திரைத் திருவிழாவும், அத்திருவிழாவில் கூறப்படும் பழமரபுக் கதையும் ஆராயப்பட்டன. இப்பழமரபுக் கதைச் செய்திகள், கள ஆய்வின்வழித் தெளிவாக்கப்பட்டு, இக்கதை குறித்த டென்னிஸ் அட்சனின் கருத்துக்கள் மதிப்பீடு செய்யப்பட்டுளளன. டென்னிஸ் அட்சனின் முடிவுகள் ஓரிரு செய்தி வேறுபாடுகளுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மையமாகச் வகைபோல எட்டாவது இயலில் வர்ணிப்புப் பாடல்கள் ஆராயப்பட்டுள்ளன. அழகர்கோயிலை மதுரை வட்டாரத்தில் பிறந்து, கொண்டு வர்ணிப்புப் பாடல்கள் ஒரு சிற்றிலக்கிய வளர்ச்சிபெற்றுள்ளன. வர்ணிப்புப் பாடல்களின் தோற்றமும் அவற்றின் வளர்ச்சியில் பாகவத அம்மானை பெறும் இடமும் விளக்கப் பட்டுள்ளன. ஒன்பதாவது இயலில் சித்திரைத் திருவிழாவில் வெளிப்படும் நாட்டுப்புறக் கூறுகள் ஆராயப்பட்டன. கால்நடை வளர்ப்போர், உழுதொழில் செய்வோர் ஆகியோரின் தெய்வமாக அழகர்கோயில் இறைவன் விளங்கும் செய்தி விளக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டு வைணவக் கோயில்களில் அழகர்கோயில் பெற்ற தனிச்சிறப்பாகும். பத்தாவது இயலில் கோயிற் பணியாளர்களுக்கும் இக்கோயி லுக்குமுள்ள உறவு ஆவணங்களாலும், நடைமுறைகளாலும், நம் பிக்கைகளாலும் விளக்கப்பட்டது. அவர்கள் கோயிலையும் தங்களை காத்துக்கொள்வதற்காக, காலமாற்றங்களுக்கு நெகிழ்ந்து யும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/258&oldid=1468135" இலிருந்து மீள்விக்கப்பட்டது