பக்கம்:அழகர் கோயில்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிற்சேர்க்கை : I : ஆறுபடை வீடுகளும் பழமுதிர்சோலையும் முருகக் கடவுள் வீற்றிருக்கும் தலங்களில், ஆறு தலங்களை ணைத்து ‘ஆறுபடை வீடுகள்' என வழங்கிவருகின்றனர். முருகன் ஆறுபடை வீடுகளுக்கு உரியவன் என்பது தமிழர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. பரங்குன்றம், அலைவாய் (திருச்செந்தூர்), ஆவிநன் குடி (பழனி), ஏரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை (அழகர் கோயில்) ஆகிய ஊர்களை ஆறுபடை வீடுகள் என்பர். சங்க இலக் கியங்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படையினையே இக்கருத்துக்கு முதற் சான்றாகக் காட்டுவர். குன்றுதோறாடலை விடுத்துத் திருத் தணியைச் சேர்த்துக் கூறும் வழக்கமும் உண்டு. இக்கருத்திலமைந்த வண்ணப்படங்களையும் (Lithographs) தமிழ்நாட்டில் நிறையவே காணலாம். முதல் மூன்று தலங்களும் இன்றளவும் முருகன் கோயிலை உடையவனாக விளங்குகின்றன. குன்றுதோறாடல், பழமுதிர் சோலை ஆகிய இரு தலங்களும் பல ஐயப்பாடுகளைத் தோற்று விக்கின்றன. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலப்பதிகார அரும் பதவுரையாசிரியர், குடந்தைக்கருகில் உள்ள சுவாமிமலையை 'வெண் குன்றம்' என்று குறிக்கிறார்.: 15 ஆம் நூற்றாண்டினரான அருண கிரிநாதர் அதையே 'ஏரகவெற்பெனும் அற்புதமிக்க சுவாமிமலைப் பதி' என்று குறிக்கிறார்.3 அருணகிரிநாதருக்கு முன் சுவாமிமலையே திருவேரகம் என்று குறிப்பதற்குக் கல்வெட்டு, இலக்கியச் சான்றுகள் ஏதும் இல்லை. வெண்குன்றமும் திருவேரகமும் இரண்டு ஊர்கள் எனச் சிலப்பதிகாரம் தெளிவாகக் குறிக்கிறது.4 குமரி மாவட்டத்தில் தக்கலைக்கு அருகில் உள்ள குமாரபுரமே திருவேரகம் என்பது சிலர் கருத்து. நெல்லை மாவட்டத்தில் உள்ள வள்ளியூர்தான் திருவேரகம் என்று இன்னும் சிலர் கருதுகின்றனர். டாக்டர் மா. இராசமாணிக்கனார், 'தென்கன்னட மாவட்டத்தில் புத்தூர் வட்டத்திலுள்ள குமாரபர்வதமே திருவேரகம்' என்கிறார்.1 குன்றுதோறாடல் என்ற தலம் எங்கிருக்கிறது என்று இது வரை யாரும் கண்டறியவில்லை. பழமுதிர்சோலை என்னும் தலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/260&oldid=1468137" இலிருந்து மீள்விக்கப்பட்டது