பக்கம்:அழகர் கோயில்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுபடை வீடுகளும் பழமுதிர்ச் சோலையும் 255 செய்தியோ குறிப்போ முருகாற்றுப்படை தவிர வேறு எத்தச் சங்க இலக்கியத்திலும் இல்லை. 'மதுரைக்கருகில் உள்ள அழகர்மலைப் பகுதியில் இப்புலவர்கள் (சங்கப் புலவர்கள்) காலத்தில் திருப்பரங் குன்றத்தைப் போல் முருகன் கோயில்கொண்ட மலை ஒன்று இருந் திருக்குமாயின் இப்புலவர்கள் அதனைப் பாடாது விட்டிருப்பார் களோ?' என்ற கேள்வியின் மூலம் தன் கருத்தை இராசமாணிக்க னார் தெளிவாக்குகிறார்.13 இருப்பினும் இச்சிக்கல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அழகர் கோயில் என்னும் பழமுதிர்சோலை முருகன் தலமே என்றும், இன் றுள்ள திருமால் கோயிலே முருகன் கோயில்தான் என்ற கருத் துப்படவும் 'பழமுதிர்சோலை' என்ற பெயரோடு ஒரு நூலே வெளி வந்துள்ளது. 14 இந்நூலின் கருத்துக்களை ஆராய்வதற்குமுன் வேறு சில கேள்விகளும் எழுகின்றன. திருமுருகாற்றுப்படை முருகனது ஆறுபடை வீடுகளைக் குறிப் பதானால், 'முருகன் ஆறுபடை வீடுகளுக்கு உரியவன்' என்ற கருத்து அந்நூலில் ஓரிடத்தில்கூட இல்லையே, ஏன்? ஒவ்வொரு தலமாக விரித்துச் சொல்லும் நக்கீரர் 'ஆறு' என்ற எண்ணுப் பெயரை ஓரிடத்தில் குறிக்கவில்லை என்பதையும் எண்ணவேண்டும். ‘படைவீடு' என்ற சொல் போர்வீரர் படை தங்கியிருக்கும் இடத்தைக் குறிப்பதாகும். இதனைப் 'பாடிவீடு' என்று குறிப் பிடுவதும் உண்டு. நெல்லை மாவட்டத்தில் தாமிரவருணி ஆற்றங் கரையில் உள்ள 'மணற்படைவீடு' என்னும் ஊர் பாண்டியர் படை தங்கியிருந்த இடமாகும். தஞ்சை மாவட்டத்தில் குடந்தைக்கருகில் ஆரியப்படையூர், பம்பைப்படையூர் என்ற இரண்டு ஊர்கள் உள்ளன. இவற்றுக்கருகில் உள்ள 'பழையாறு' எனப்படும் பழையாறை, பிற் காலச் சோழர்களின் இரண்டாம் தலைநகராக இருந்தது. எனவே இவ்விரண்டு படையூர்களும் சோழர்களின் படைகள் தங்கியிருந்த டைவீடுகளாகும். போரிட்டு முருகன்,அலைவாய் எனப்படும் திருசெந்தூரில் சூரபதுமனைப் எனப்படும் அழித்தான். எனவே அது 'படைவீடு' தகுதி பெற்றது. பரங்குன்றிலோ. ஆவிநன்குடியிலோ, திருவேரகத் திலோ முருகன் போர்க்கோலம் கொண்டதாகவோ போரிட்டதாகவோ புராணச் செய்திகளும் இல்லை. அப்படியாயின் அவற்றைப் படைவீடு என்று அழைப்பது எப்படிப் பொருந்தும்? எவ்வகையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/262&oldid=1468139" இலிருந்து மீள்விக்கப்பட்டது