பக்கம்:அழகர் கோயில்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுபடை வீடுகளும் பழமுதிர்சோலையும் 257 என்ற பழமுதிர்சோலை அழகர்மலையில் உள்ளதாக அருணகிரிநாதர் தம்காலத்து நிலவிய மக்களின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே பாடினார். தான் செல்லாத தலத்தைப் பாடுவாரா? கேள்வி எழுவது இயற்கை. காணாத ஒன்றையும் பாடுவது பக்தி உலகில் இயற்கையே. இலங்கையில் உள்ள திருக்கேதீச்சுாத்துக்குச் செல்லாத திருநாவுக்கரசர், தேவாரத்தில் அதைப் பாடியுள்ளார். அதுபோலவே திருக்கயிலாயத்தைத் தேவார மூவரும் பாடியுள்ளமை வும் நினையத்தக்கது. அருணகிரிநாதரின் திருப்புகழிலும், முருகன் ஆறுபடை வீடு களுக்கு உரியவன் என்ற கருத்தை எங்கும் காணவில்லை. 'குன்று தோறாடல்' என்ற தலைப்பில் அமைந்த பாடல்களிலும் அந்தப் பெயரோடு ஓர் ஊர் இருந்ததாக அருணகிரிநாதர் பாடவேயில்லை. அப்படியானால், பழமுதிர்சோலைமலை என்ற முருகாற்றுப் படையின் ஈற்றடிக்கு எவ்வாறு பொருள் கொள்வது?"தி.ரு.முருகாற்றுப் கொண்டு படை 'பழமுதிர்சோலைமலைக் கிழவோனே' என்றது பழமுதிர்சோலை என்ற ஒரு நிருப் தி முருகனுக்கு உரியதாகக் கூறுவதுண்டு, நச்சினார்க்கினியர் உரையால் அப்படியொரு திருப் பதி இருந்ததென அறிய இயலவில்லை. முருகாற்றுப்டையின் சொல்லமைப்பும் அதனை வலியுறுத்தளில்லை இவ்வாறு கூறும் ஒளவை சு.து.11 அடுத்து ஓர் ஐயத்தைக் கிளப்புகிறார். "திருமாலடியார் திருமாலிருஞ்சோலை என்கின்றனர். அவர் கள் சோலைமலை என வழங்குவதும் முருகாற்றுப்படை 'பழமுதிர் சோலைமலை' என வழங்குவதும் ஒத்திருப்பது பற்றி இவ்வாறு கோடற்கு இடமுண்டாகிறது. இதுவும் நன்கு ஆராய்தற்குரியது” என்கிறார். 18 முருகாற்றுப்படையின் சொல்லமைப்பு எதனை யுறுத்தளில்லை என்றாரோ அதனை அந்த முருகாற்றுப்படையின் சொல்லமைப்பினையே நம்பி ஆராயவேண்டும் என மறுவினாடியே கூறுகிறார். ஏன் இந்த முரண்பாடு? வலி இவருடைய ஐயத்துக்கு இராசமாணிக்கனார் பின்வருமாறு விடை கூறுகிறார் திருமுருகாற்றுப்படையைக் கூர்ந்து கவனிப்பின், அதன் ஈற்றடி யாகிய 'பழமுதிர்சோலைமலை கிழவோனே' என்பது எழுவாயாக அமைந்திருத்தலைக் காணலாம்...... 'பழமுதிர்குன்று' என்னும் தொடர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/264&oldid=1468141" இலிருந்து மீள்விக்கப்பட்டது