பக்கம்:அழகர் கோயில்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுபடை வீடுகளும் பழமுதிர்சோலையும் 261 செவிவழிச் செய்தியாக வழங்குவதாகவும் கட்டுரையாளர் கூறுகிறார் (u. 86). 'அழகர்மலைக் கல்வெட்டுக்கள்' எனப் புகழ்பெற்ற தமிழி (பிராமி) கல்வெட்டுகள் உடைய இக்குகை சமணத்துறவிகளின் இருப்பிடம் என்பது வரலாற்றறிஞர் முடிவு. பிற சமணக்குகைகளைப் போலவே இக்குகையும் கற்படுக்கைசளை (rock cot beds) உடையதே. சமணத்துறவி ஒருவரின் புடைப்புச்சிற்பமும் அதன் கீழ் 'அச்சணந்தி செயல்' என்றொரு சிறிய வட்டெழுத்தும் கல்வெட்டும் இங்கு உள்ளன. எழுத்தமைதிகொண்டு இவ்வட்டெழுத்துக் கல்வெட்டின் காலம் கி.பி. 8 அல்லது 9ஆம் நூற்றாண்டு ஆகலாம் என்பர் பி.பி. தேசாய்.23 எனவே இந்த ஆய்வுக்கட்டுரை வலியுறுத்தும் கருத்துக்கள் இவைதாம் : 1. அழகர்கோயில், பழமுதிர்சோலை என்ற பெயரில் முருகன் திருப்பதியாக இருந்ததில்லை. 2. தமிழ்நாட்டில் முருகன் திருப்பதிகள் சங்க காலத்திலும் நிறைய இருந்தன. ஆனால் 'ஆறுபடை ாடு' என்பது மக்களிடையே பிறந்த நம்பிக்கைதான்; வரலாற்று உண்மையன்று. முருகாற்றுப் படையின் அடிகளுக்குத் தவறான பொருள் கண்டதால் இந்த நம் பிக்கை வளர்ந்தது. குறிப்புகள் 1.இ.எஸ். வரதராஜய்யர், தமிழ் இலக்கிய வரலாறு (1-1109 A.D.), 1957, ப.239. 2. அடியார்க்கு நல்லார் (உரை), சிலப்பதிகாரம், உ,வே.சா. பதிப்பு. 1960, ப. 512. 3. திருப்புகழ், கழகப்பதிப்பு. 1974, பாடல் 232, 4. சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்" சிலம்பு.. குன்றக்குரவை (தெய்வம் ராஅயது), பாடல் 8.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/268&oldid=1468145" இலிருந்து மீள்விக்கப்பட்டது