பக்கம்:அழகர் கோயில்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

266 அழகர்கோயில் இதே உவமையால் இவர் இருவரையும் விளக்கிப் பாடியமை நினையத்தக்க செய்தியாம். கடலின் நீலநிறமும், கரைமணலின் வெண்திறமும் கருதியே திருமாலையும், வாலியோனையும் இவை இணைத்துக் குறிப்பிடுகின்றன. இளம்பெருவழுதியார், பரிபாடலில் ('5) இவர்கள் இருவரையும் 'காத்தலாகிய ஒரே தொழில் செய்யும் இருவர் எனவும் குறிக்கிறார்.8 புலவர் கீரந்தையார் 2ஆம் பரிபாடலில் திருமாலே நீ வாலியோற்கு இளையன் என்பார்க்கு இளையனாகவும், முதியன் என்பார்க்கு முதியனாகவும் உள்ளாய் என்கிறார். முதற் பரிபாடலில் இளம்பெருவழுதியார் திருமாலே வாலியோனைத் தன்னகத்துக் கொண்டுள்ளதாகப் பாடுகிறார். நாள்காவது பரிபாடலில், 'கருடக் நொடியுடைய திருமாலே! பனைக்கொடியும், நாஞ்சிற்கொடியும். யானைக்கொடியும் உனக்குரியவையே" என்கிறார் கடுவன் இளவெயினனார். பதின்மூன்றாம் பரிபாடலில் நல்லெழினியார்', 'திருமாலே! துளவஞ்சூடிய அறிதுயிலோனும் நீயே! மாற்றார் உயிருண்ணும் நாஞ்சில் உடையோனும் நீயே! ஆதிவராகமும் நீயே! என்று தெளிவாகவே கூறிவிடுகிறார். கடுவன்இளவெயினனார் கிருஷ்ணனின் நான்கு வியூகங்கள் எனப்படும் வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்தியும்நன், அநிருத்தன் என்பவற்றை, "செங்கட் காரி கருங்கண் வெள்ளை பொன்கட் பச்சை பைங்கண் மாஅல்'’9 என்று குறிப்பர். வெள்ளை பலராமனின் நிறம் மட்டுமன்று; வெள்ளை என்பதே பலராமனின் பெயர்களில் ஒன்று எனப் பிங்கல நிகண்டு கூறும் 16 'மேழி வலனுயர்த்த வெள்ளை', 'வெள்ளை நாகர்' எனச் சிலப்பதிகாரமும்,11 'பொற்பனை வெள்ளை' என்று இன்னாநாற் தும் பலராமனைக் குறிப்பிடும். கலப்பையினையுடைய பலராம னையே சங்கர்ஷணன் என்பர். 'சங்கர்ஷணன் என்ற சொல்லுக்கே 'உழவன்' (ploughman) என்று பொருள் என ஜான் டவ்சனின் (John Dowson) இந்துக்கடவுள் புராணமரபு அகராதி கூறுகின்றது. 13 எனவே மருதநிலத்து உழவரை இந்திர வழிபாட்டிலிருந்து கிருஷ்ண வழிபாட்டுக்கு இழுக்கும் முயற்சி பரிபாடல் காலத்திலேயே தொடங்கிகிட்டது எனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/273&oldid=1468150" இலிருந்து மீள்விக்கப்பட்டது