பக்கம்:அழகர் கோயில்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ்நாட்டில் வாலியோன் (பலராமன்) வழிபாடு 257 சங்க இலக்கியங்களுக்குப் பிற்பட்ட திருக்குறள் 'விசும்புளார் கோமான் இந்திரன்'14 என இந்திரனைக் குறிந்தாலும், 'வான் சிறப்பு' அதிகாரத்தில் மழைத் தெய்வமான இந்திரனைப் பற்றிய குறிப்பு ஏதும் இல்லை. கடல் சார்ந்த நெய்தல்நிலத் தெய்வமாகத் தொல்காப்பியா வருணனைக் குறித்தாலும், சங்க இலக்கியங்களிலேயே வருண வழிபாடு பற்றிய தெளிவான குறிப்புக்கள் இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதைப் போலவே இந்திர வழிபாடும் சங்க இலக்கிய காலத்திலேயே பின்னடைந்துவிட்டது போலும். சிலப்பதிகாரத்தில், பூம்புகாரில் இந்திரன் கோட்டம் இருந்த தாக இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். புகார் நகர மக்கள் இருபத்தெட்டு நாள் இந்திரவிழா எடுக்கின்றனர். "தமிழ் வேந்தர் கள் இந்திரனோடு சேர்த்து நின்று போரிட்டுத் தானவர்களை வென்றார்கள் என்பது போன்ற புராணச் சிந்தனையின் வளர்ச்சி யினை இவ்விழா எடுத்தற்குரிய காரணத்தில் காண்கிறோம்... இவ்விழா அரசியல், சமுதாயம், சமயம் அனைத்தும் இணைந்துள்ள ஒரு விழாவாக உள்ளது” என்று குறிப்பிடும் ப. அருணாசலம் அடுத்து ஒரு ஐயத்தைக் கிளப்புகின்றார். 'இந்திர விழவூரெடுத்த காதையில் சோழர்களுக்கு ஏதோ தீங்கு ஏற்பட்டுவிட்டதன் எதிரொலிகளாகச் சில வரிகள் உள்ளன. "வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க" (65) வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்க" "வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க" (79) (85) எனக் கூறிப் பலியூட்டுகின்றனர். இங்கு வேந்தற்கு உற்ற ஊறு யாது? இந்திரவிழா ஒரு சாந்திவிழாவா?15 என்று வலிவான ஓர் ஐயத்தையும் எழுப்புகின்றார். இந்திரவிழாவும் புகாரின் கடற்கரையில் நிகழ்வதாகவே இளங்கோ குறிக்கிறார். மருதநிலத் தெய்வத்துக்கு நெய்தல் நிலத்தில் விழா நடைபெறுகிறது. இந்திரனுக்கு உரிய திசை கிழக்கு என்பர். கடற்கரைவாழ் மக்கள் கடலை நோக்கி-கிழக்கு நோக்கி இந்திரனை வழிபட்டார்களோ என்றெண்ணத் தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/274&oldid=1468151" இலிருந்து மீள்விக்கப்பட்டது