பக்கம்:அழகர் கோயில்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ்நாட்டில் வாலியோன் (பலராமன்) வழிபாடு 269 பிடித்து அவர்களைக் காக்கிறான். இது விஷ்ணுபுராணம் தரும் செய்றி. கலப்பையேந்திய பலராமன் கண்ணனோடு எப்பொழுதும் இணைத்திருக்கிறான். கிருஷ்ணன் அவதாரங்களில் பலராம அவதார மும் ஒன்று என்றும், விஷ்ணு கண்ணனாக வடிவெடுத்து வந்த போது அவனது பள்ளியணையாகிய ஆதிசேடனே (இராமாவதாரத்தில் இலக்குவனாக வந்ததுபோல) பலராமனாக வந்தான் என்றும் புராணங்கள் கூறும். எனவே கிருஷ்ணனுடைய இந்திர எதிர்ப்பில் இலராமனாக வந்தான் என்றும் புராணங்கள் கூறும். எனவே கிருஷ்ணனுடைய இந்திர எதிர்ப்பில் பலராமனுக்கும் பங்குண்டு. கிருஷ்ணாவதாரம் பற்றிய சுதைகள் சங்க இலக்கியக் காலத் திலேயே தமிழ் நாட்டில் நிலவின. முல்லைநிலத் தெய்வமான மால் வழிபாட்டோடு புராணங்கள் கூறும் கிருஷ்ணாவதாரச் செய்திகளும் கலந்துவிட்டதைச் சங்கப் பாடல்களில் காணலாம்21 புகார்க் காண்டத்தில் சோழநாட்டில் இந்திரன் பெற்ற சிறப் புக்களைக் கூறிய இளங்கோவடிகள், மதுரைக் காண்டத்தின் தொடக்கத்தில் பாண்டியனுக்கும் இந்திரனுக்கும் ஏற்பட்ட பகை பீளைக் கூறுகின்றார். ஒரு சமயம் பாண்டியநாட்டில் இந்திரன் மழை பொழியாதிருந்தபோது, பாண்டியன் இந்திரனோடு போர் தொடுக்கிறான். இந்திரன் கனமான தன் கழுத்தணியைப் பாண்டியன் தோளில் இட்டு அவனை வீழ்த்த முயல்கிறான்; தோல்வியுறு கிறான். இந்திரன் முடியை வளைகளினால் உடைக்கிறான் பாண் டியன். 22 இச்செய்தியின்வழி பாண்டியநாட்டில் இந்திர வழி பாட்டிற்கு ஏற்பட்ட எதிர்ப்பொன்றைக் காட்டுகின்றார் இளங்கோ வடிகள். இந்திரவிழா முடிவில் பூம்புகாரைவிட்டுப் புறப்பட்டுக் கண் ணகியும் கோவலனும் உறையூர் கழிந்து பாண்டிய நாட்டின் எல் லைக்குள் நுழைகின்றனர். அவர்கள் கேட்ட முதற்குரல், இந்திரனை வென்ற பாண்டியனின் சிறப்பைப் பாடிக்கொண்டிருக்கிறது. அது மாங்காட்டு மறையவன் குரல், பூம்புகாரில் இந்திரவிழாக் கொண் டாடும் வணிகர் குலத்தைச் சேர்ந்த கோவலன் அவனை அணு கவும் அது ஒரு காரணமாகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/276&oldid=1468153" இலிருந்து மீள்விக்கப்பட்டது