பக்கம்:அழகர் கோயில்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அழகர்கோயிலின் தோற்றம் 21 இக்கோயிலுக்கு ஒரு மைல் கிழக்கே பிராமி எழுத்துக் கல் வெட்டுக்களோடு காணப்படும் மலைக்குகை சமணருடையதாகும். அச்சணந்தி எனும் சமணப்பெரியாரின் உருவத்துடன், 'அச்சணந்தி 'செயல்' என்னும் மிகச் சிறிய வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் இங்கே காணப்படுகிறது. அச்சணந்தியைக் குறிப்பிடும் கல்வெட் டுக்களின் எழுத்தமைதிகொண்டு அச்சணந்தியின் காலம் கி.பி.எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டாகலாம் காலம் என பி.பி. தேசாய் கருதுகின்றார். 20 எனவே அழகர்கோயில் ஆழ்வார்கனால் யாடப்பெற்ற காலத்திலும் இங்குச் சமணர் வாழ்ந்திருந்ததனை யறியலாம். எனவே அழகர்கோயிற் பகுதியில் எதிர்க்கப்பட்டவர் அல்லது அழிக்கப்பட்டவர் பௌத்தர்களாகவே இருக்க முடியும். சீனி. வே. யின் கருத்தினை மறுப்பதற்கு வாய்ப்பில்லை; உடன்படுவதற்குச் சான்றுகள் உள்ளன. எனவே அழகர்கோயில் 'பௌத்தக் கோயிலாக இருந்தது என்று குறிப்பிடும் அவர் சுருத்து ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதே. அவர் கருத்தினை வலியுருத்தும் வேறு சில சான்றுகளும் இத்தலத்தில் காணப்படுகின்றன. அவற்றினையும் தொகுத்துக் காண்பது பொருத்தமுடையதாகும். 28. சக்கரத்தாழ்வார் - 'பிரயோக சக்கரம்' : திருமாலின் போர்க்கருவியான திருவாழி ஆழ்வார்க்கு இப் கோயிலில் உள்ள சன்னிதி சிறப்பானதாகும். தனக்குரிய பதினாறு ஆயுதங்களை ஏந்தி இங்கு அவர் காட்சி தருகிறார். இக்கோயில் கல்வெட்டு ஒன்று மலைமீதிருந்த திருவாழி ஆழ்வார் கோயிலைக் குறிப்பிடுகிறது. இன்று மலைமீது திருவாழிக்குக் கோயில் ஏதும் இல்லை. எனவே மலைமீதிருந்த கோயிலே அழிந்து, பின்னர் அழகர்கோயிலுக்குள் கொண்டுவரப்பட்டதெனக் கருதலாம். திருமால் கோயிலுக்குரிய நிலங்களில் திருமாலின் சக்கரம் பொறிக்கப்பட்ட கல்லை நடுவது வழக்கம். இதற்குத் 'திருவாழிக்கல்' எனப் பெயர். மலைமீது திருவாழி ஆழ்வார்க்குக் - சக்கரந்தாழ் வார்க்குக் கோயில் இருந்ததென்பது, மலைமீது இக்கோயிலுக்குரிய உரிமையினை நிலைநாட்டவே ஆகும். சாதாரணமாக னிதர் நடமாடாத மலைப்பகுதிகளில் உரிமையை நிலைநாட்ட வேண்டிய தேவை, பிறர் யாரேலும் மலைக்கு உரிமை கொண்டாட முற்படும் போதே ஏற்படுகிறது. பௌத்த எதிர்ப்பின் ஒரு பகுதியாகவே இக்கோயிற் பகுறியில் இது நிகழ்ந்திருக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/28&oldid=1467883" இலிருந்து மீள்விக்கப்பட்டது