பக்கம்:அழகர் கோயில்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிற்சேர்க்கை 1 : 3 கல்வெட்டுக் குறிப்புகள் அழகர்கோயிலிலுள்ள கல்வெட்டுகள் தரும் செய்திகள், கல்வெட்டு ஆண்டறிக்கைகளிலிருந்து இங்கே அரசினரின் தொகுத்துத் தரப்படுகின்றன. 1. ஊர்ப்பெயர்கள் : 'ராஜராஜப் பாண்டிநாட்டு, ராஜேந்திரசோழ வளநாட்டுக் கீழிரணியமுட்டத்துத் திருமாலிருஞ்சோலை' என ஒரு கல்வெட்டு இவ்வூரினைக் குறிப்பிடுகிறது 3 ராஜராஜன், ராஜேந்திர சோழன் முதலிய பெயர் வழக்குகள், பாண்டியநாடு சோழர்களால் வெற்றி கொள்ளப்பட்டபின் எழுந்த கல்வெட்டு இது எனக் கொள்ள இட மளிக்கின்றன. ஆயினும் 'இரணியமுட்டம்* என்னும் பெயர், இந்நிலப்பகுதிக்குப் பழங்காலந்தொட்டு வழங்கிவந்திருக்க வேண்டு மெனத் தோன்றுகின்றது. பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாத் தினைப் பாடிய புலவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்க் கொளசிகனார்' எனக் குறிக்கப்படுவதால், இரணியமுட்டம் என்னும் பெயர், இந்நிலப்பகுதிக்கு நெடுங்காலமாக வழங்கிவந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இன்றும் அழகர்கோயிலுக்குந் தென் கிழக்கே ஐந்துகல் தொலைவில் ஒரு சிற்றூர் 'இரணியம்' என்ற பெயரோடு விளங்கக் காணலாம். 2. அக்கிரகாரம்: 'சாமந்த நாராயணச் சதுர்லேதிமங்கலம்' என்ற பெயருடன் திருமாலிருஞ்சோலையில் ஓர் அக்கிரகாரம் இருந்த செய்தியை ஒரு கல்வெட்டால் அறிகிறோம். 2 மற்றொரு கல்வெட்டால் இதனை பல்லவராயன்' என்று தெரி அமைத்துக்கொடுத்தவன் 'பின்ளைப் கிறது.3 3. இறைவன் பெயர் : வெட்டு இங்குக் கோயில் கொண்ட இறைவன் பெயரை 'திருமாலிருஞ்சோலை ஆழ்வார்' எனக் ஒரு கல் குறிக்கிறது.

  • திருமாலிருஞ்சோலைப் பரமஸ்வாமி' என்ற பெயரை ஆனேகக் கல்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/280&oldid=1468157" இலிருந்து மீள்விக்கப்பட்டது