பக்கம்:அழகர் கோயில்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

280 அழகர்கோயில் மகாபலி வாணாதராயர் என்பவனும் திருவிளக்கெரிக்க நிவந்தம் கொடுத்துள்ளான் 9 திருவுடையாள் என்ற அரண்மனைப் பணிப்பெண் ஒருத்தி எட்டு திருவிளக்குகள் எரிக்கப் பத்து மா நிலம் கொடுத்துள்ளாள். 58 வாணாதராயரான திருவேங்கடமுடையார் மலைமீதிருந்த திரு வாழிஆழ்வார் கோயிலில் திருவிளக்கெரிக்க நிவந்தம் கொடுத் துள்ளார்.58 திருக்கோட்டியூரைச் சேர்ந்த ஒருவன் கோயில் கணக் கரிடம் பதினொரு அச்சு முதலாக வைத்து அதிலிருந்து பெறும் வட்டியிலிருந்து ஒரு நந்தாவிளக்கெரிக்க நிவந்தம் அளித் துள்ளான். 62 12. யாக்ஞோபவீதம் (திருப்புரிதால்): முதல் திருச்சுற்றில் மேலைச் சுவரிலுள்ள பிற்காலப் பாண்டியர் கல்வெட்டொன்று இடைக்காட்டூர் அரையன் சடகோபதாசன் என் பவன் கோயிலுக்கு 'யாக்ஞோபவீதம் (திருப்புரிநூல்) கொடுத்துச் சில வருமானங்களைப் பெற்றதைக் குறிப்பிடுகின்றது. 59 13. வழக்குகள் : இக்கோயில் பணியாளர்க்கிடையில் எழுந்த இரண்டு வழக்கு களைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. விசயநகர மன்னர் காலத்தில் இக்கோயில் பிராமணப் பணி யாளர்களிடையில் சோரியர், சாமானியர் ஆகிய இரு பிரிவினருக் கிடையில் சில உரிமைகள் குறித்து எழுந்த வழக்கில், முன் வாணாதி ராயர் காலத்தில் இருந்த நடைமுறையினையே பின்பற்றுவது என முடிவுசெய்யப்பட்டது. 64 மற்றொரு வழக்கு, 'தீர்த்த மரியாதை' பெறுவதில் பட்டர் ஐயங்காருக்கும், திருமாலை ஆண்டார் ஐயங்காருக்கும் இடையில் ஏற்பட்ட வழக்கொன்றினை வைத்தியப்ப தீட்சதர், குப்பையாண்டி செட்டி, வசந்தராய பிள்ளை. திருங்கவேடையன் நடுவர்களாக இருந்து தீர்த்துவைத்த செய்தியினைக் குறிப்பிடு ஆகியோர் கிறது.86 14. வாணாதிராயர்கள் : விசயநகர மன்னர்கள் காலத்தில் தமிழ்நாட்டின் சில பகுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/287&oldid=1468164" இலிருந்து மீள்விக்கப்பட்டது