பக்கம்:அழகர் கோயில்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சல்வெட்டுக் குறிப்புகள் 281 களை ஆண்ட வாணாதிராயர்கள் இக்கோயிலின்மீது கொண்டிருத்த பற்று குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதாகும். இம்மன்னர்கள் பெயரையே இக்கோயில் இறைவனுக்குப் பாசுரங்களில் வழங்கும் தங்கட்குச் சூடிக்கொண்டனர். 1. திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணா தராயன் உறங்காவில்லிதாசனான சமரகோலாகலன் (.9.1428-1477) 2. சுந்தரத்தோளுடையான் மஹாபலி வாணாதிராயன் 3. இறந்தகாலம் எடுத்த (.9.1468-1488) சுந்தரத்தோளுடையான் மகாபலி வாணாதிராயன் (.9.1515-1533) ஆகிய பெயர்களைக் கல்வெட்டுகளிலிருந்து வேதாசலம் எடுத்துக் காட்டுகிறார்.86 சகம் 1391 (கி.பி. 1369) இல் காஞ்சி ஏகாம்பரநாதர் நோயிலில் பொறிக்கப்பட்டுள்ள, மாவலி வாணாதராயன் கல்வெட்டு, அழகர் திருவுள்ளம்' என்ற தொடருடன் முடிகிறது. 57 அழகர்கோயிலில் சகம் 1386 (கி.பி.1464) இல் எழுந்த ஒரு கல்வெட்டு, திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதராயன் உறங்காவில்லிதாசன் ஆணைப்படி திருவாளன் சோமயாஜி இக்கோயிலில் உபானம் முதல் ஸ்தூபி வரை திருப்பணி செய்ததைக் குறிப்பிடுகிறது. 58 இக்கோயிலில் பெரிய அளவில் நடந்த திருப் பணியாகக் கல்வெட்டுச் சான்றுடன் இது ஒன்றையே குறிப்பிட முடிகிறது. இக்கோயிலிலுள்ள ஒரு இப் கல்திரிகையில், *திருமாலிருஞ் சோலை நின்றான் மாவலி வாணாதராயர் உறங்காவில்லிதாஸனான சமரகோலாகலன்' என்ற கல்வெட்டு காணப்படுகிறது. 69 பெயர், இக்கோயிலிலுள்ள வெள்ளியாலான ஒரு கலசப்பானையிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 66 தாயார் சன்னிதி மேலைச்சுவரின் அடிப்பகுதியில் கல்லில் ஒரு கோடு வெட்டப்பட்டுள்ளது. அதனருகில் இக்கோடு, 'திருமாலிருஞ் சோலை நின்றான் மாவலி வாணாதராயன் மாத்ராங்குலம்' என்ற இக்கோட்டின் நீளமுடைய அளவுகோலாகக் கொண்டு இத்தாயார் சன்னி இவ்வாணாதிரா யனால் கட்டப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது." கல்வெட்டு உள்ளது. கோலையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/288&oldid=1468165" இலிருந்து மீள்விக்கப்பட்டது