பக்கம்:அழகர் கோயில்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 அழகர்கோயில் இக்கோயிலில் மூலத்திருமேனியாக விளங்கும் திருமால், கையில் சக்கரத்தை, சுற்றிச் செலுத்தும் நிலையில் (பிரயோசு நிலையில்) வைத்துள்ளார். வழிபடும் அடியார்க்கு அருள் சுரக்கும் இறைவன், எதிரிகளை அழிக்கச் செலுத்தும் சக்கரத்தை ஆயத்த நிலையில் வைத்திருப்பது யாரோ ஒரு பகைவனை அழிப்பதற் காகவே இருக்க முடியும். பொதுவாக, வைணவக் கோயில்களில் திருமாலின் கையில் சக்கரம் அணியாகவே விளங்கும்; செலுத்தும் நிலையில் இருப்பதில்லை. இக்கோயிலில் இது ஒரு விதிவிலக்கான செய்தியே. 2.9. இலக்கியச் செய்திகள் : சீனி.வே.யின் கருத்தினை மனத்திலிருத்தி இத்தலம் குறித்த பரிபாடலை நோக்க வேண்டும். "பகைவர்களை வெற்றி கொண்ட வனுடைய இருங்குன்றத்திற்கு மனைவியோடும், பெற்றாரோடும், பிறந்தாரோடும், உறவினரோடும் செல்லுங்கள் என்பது இப்பாடல் தரும் செய்தியாகும்.41 சங்க இலக்கியத்தில், 'இக்கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள்' என்னும் பிரச்சாரப் போக்கில் அமைந்த பாடல் இது ஒன்றேயாகும். இருங்குன்றம் சமயப் போராட்டக் கள மாக விளங்கிய குறிப்பும், இக்கோயிலுக்கு மக்கள் ஆதரவினைத் திரட்ட வைணவம் முயன்றதும் இப்பாடலில் புலப்படுகின்றன. இத்தலம் குறித்த பெரியாழ்வார். திருமங்கையாழ்வார். நம்மாழ்வார் ஆகியோரின் பாசுரங்கள் ஒவ்வொன்றிலும், 'இம்மலை திருமாலுக்குரியது; இக்கோயில் திருமாலுக்குரியது' என்னும் கருத்து பேசப்படுகிறது. இக்கருத்து மீண்டும் பேசப்படுவதற்குரிய காரணம் சிந்தனைக்குரியது. இத்தலம் குறித்த ஆழ்வார்களின் பாசுரங்களில் பொதிந்துள்ள பிறமத எதிர்ப்புணர்ச்சியை அவற்றுக்கான வைணவ ஆசாரியர்களின் உரைகள் நன்கு வெளிப்படுத்திக் காட்டுகின்றன. இக்கோயில் தலபுராணம் தரும் செய்தியும் இவ்விடத்தில் எண்ணிப்பார்க்க வேண்டியதாகும். யக்ஞ சீலர்களான பிராமணர்களைக் காப்பாற்றுவதன் நிமித்தமும், இராக்ஷஸர்களை நாசஞ் செய்வதன் பொருட்டும், ஸாது ஸம்ரக்ஷ்ணத்திற்காகவும் க்ஷஷீராப்தி சயனத்தை (பாற்கடலை) வீட்டு ஸ்ரீபகவான் சோலைமலையையடைந்தார்.’22 ‘இராக்ஷ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/29&oldid=1467884" இலிருந்து மீள்விக்கப்பட்டது