பக்கம்:அழகர் கோயில்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிற்சேர்க்கை II : 3 அழகர் வர்ணிப்பு (அச்சிடப்படாதது) அச்சிடப்படாத 'அழகர் வர்ணிப்பு' ஆய்வாளருக்காக மதுரை கீரைத்துறை -மாகாளிப்பட்டியைச் சேர்ந்த பிச்சைக் கோனாரால் (வயது66) பாடப்பட்டது. ஒலிப்பதிவு செய்த நாள் 13.2.1979. இவ்வர்ணிப்புப்பாடல் அழகர்கோயிலில் பயணத்தைத் தொடங் கும் இறைவன், வண்டியூர் சென்று சேரும் வரையிலுள்ள நிகழ்ச் சிகளை வருணிக்கிறது. அச்சிடப்பட்ட அழகர் வர்ணிப்பு கூறாத செய்திகள் சில இதில் காணப்படுகின்றன அழகர் ஏறிவரும் குதிரை யினைத் தேசி, மாந்தேசி ஆகிய பெயர்களால் இப்பாடல் குறிக் கின்றது. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புக்காகவோ அல்லது வேறு காரணம் கருதியோ அழகர் ஊர்வலத்துடன் கோர்ட் டாரும், போலீசாரும் உடன் வந்ததையும் இப்பாடல் குறிப் பிடுகின்றது. ஆதிமூலம் முறகரி முகத்தோனே பழம் வேண்டி நின்ற முந்திக் கணபதியே கரமதனில் கொம்பொடித்து பாரதம் எழுதிவைத்த கைலாச புத் ;னே அரனுமையாள் ஈன்றெடுத்த ஐங்கரனைப் போற்றி அளத்தன் கதை கூறுதற்காய் அன்பாய் வரமளிப்பாய் எந்தெந்தநாளும் என் இருதயம் விட்டு அகலாதிருக்க 5 திருப்பால் கடல்தனிலே கண்துயின்ற தேவன் திருமால் பாத மதை கண்டார்கள் தேவரெல்லாம் அரிவாசுதேவா கரியமால் அப்பனே வின்டார்கள் தொண்டரெல்லாம் அழகா புரிக்கண்ணன் விமடன் அவர்கள் தன்னை வணங்கிடுவீர் நீங்களெல்லாம் கேத்திரபாலர் முதல் வடக்குக் குடவரையில் களக்கமில்லாப் படிவாசல் நெய்வேத்ய பூசை கற்பூர தூபதீபம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/295&oldid=1468172" இலிருந்து மீள்விக்கப்பட்டது