பக்கம்:அழகர் கோயில்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

292 அழகர்கோயில் சேலைதுகில் கவர்ந்தோன் திருக்கண்கள் தோறும் தீர்த்தா பிஷேகம் தெரிசித்துத் தான்கடந்து நடந்தார்கள் நாட்டாரும் குடைசுருட்டி ஈட்டி நாளணியும் முன்னடக்க தொடர்ந்தார்கள் கொம்பூதி யானைபரிசேனை தூயோனைச் சூழ்ந்துவர நட்டுவ தாளத்துடனே நாகூர் நாயக்கர் கட்டளையில் நாதன் போய் நுழைய 70 கட்டுத் திட்டத்துடனே சர்க்கரைப் பொங்கல் கனிவுள்ள சம்பாவும் தட்டுத் தட்டாகவே வைத்த சூட நெய்வேத்யம் தானளிக்கவே சுமந்து கொட்டுச் சத்தத்துடனே அதிர்வேட்டுப் போட கோவிந்தன் வெளியேறி எதிரில் நிற்கும் மானிடர்க்கு நிருக்கண்கள் தோறும் இறைவன் பதவிதந்து கதிரோனொளி மறைய ஒட்டுமாஞ் சோலையிலே கண்ணபிரான் அங்குவந்து 75 ஆல விருக்ஷகத்தருகில் நாலுகால் சவுக்கை அனந்தனும் தங்கி யிருந்து மேலாம் பதமளித்து அன்பர்களைப் பார்க்க மெய்யனவன் தான் நினைத்து சூழ்ச்சியாப் பிரிட்டிஷார் கமிட்டியார் போலீசும் சேவை தாங்கிச் சூழ்ந்துவர ஆழ்ச்சி கொண்டு தானெழுந்து சூப்பிரண்டு பங்களா அத்தனை யும் தான்கடந்து நாட்டார்கள் சேவிக்க ராமையர் மண்டபத்தில் நாதனவர் உள் துழைய 80 கோர்ட்டார்கள் காவலுடன் நரசிங்கம்பட்டி குளத்தழகன் அம்பலமும் விண்ணில் புகழ்பெருக மண்ணிலுள்ளோர் கொண்டாட விசித்திரப் பதுமையுடன் நுண்ணிதமாய் மண்டபத்தைக் கமான் வரைந்த சித்திர நூலில் முறைப்படியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/299&oldid=1468177" இலிருந்து மீள்விக்கப்பட்டது