பக்கம்:அழகர் கோயில்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அழகர்கோயிலின் தோற்றம் 23 ஸர்களை நாசஞ்செய்வது' எனப் பகையழிப்பு நோக்கத்தினைத் தலபுராணம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. 2.10. கருவறைப்பெயர் : இத்தலம் குறித்த நம்மாழ்வாரின் பாசுரத்தில் வரும், 'நங்கள் குன்றம்' என்ற சொல் இக்கோயிலின் கருவறைக்குப் பெயராக வழக் கிலிருந்து வருகிறது. 'நங்கள் குன்றம்' என்பது, தம்முடைய குன்றம்' என உரிமை சுட்டும் பெயராக அமைந்திருப்பது சிந்திக்கத்தகுந்தது. தவிரவும், கோயிலின் கருவறைப்பகுதிக்கு மட்டும் தனியே ஒரு பெயரிட்டு அழைப்பது தமிழ்நாட்டும் சைவ, வைணவக் கோயில்களில் வழக்கத்தில் இல்லை. இக்கோயிலில் மட்டும் அமைந்திருப்பது விதிவிலக்கான ஒரு செய்தியே. 2.11. விமான அமைப்பும் கருத்தும்: இக்கோயிலின் விமானம் (கருவறை அடி முதல் முடி வரை) வட்டவடிவமான அமைப்புடையது. இக்கட்டிடப்பாரு மிகப் பிற்கா லத்ததாகவே தோன்றுகிறது. அடிப் (அதிட்டானப்} பகுதியில் கல் வெட்டுக்களும் இல்லை. கட்டிடப் பொருள்கள் (Materials) பிற்கா லத்தனவாகத் தோன்றினாலும் இந்த அமைப்பு (Plan) காலத்தால் மாறியதாகத் தோன்றவில்லை. 'தென்னகத்தில் புதுக்கிக் கட்டும் போது விமானத்தின் முந்திய அமைப்பை அப்படியே பின்பற்றுவது வழக்கம் என்று சி. கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார்.23 அழகர்கோயில் கருவறை அமைப்பு பிற்காலச் சோழர் (Imperial Cholas) காலத் திற்கு முந்தியதென்றும், அவ்வமைப்பில் குறிப்பிட்டுச் சொல்லும் படி பாண்டி மண்டலத்தில் இது ஒன்றே உள்ளது என்றும் கே வி. சௌந்தரராஜன் கருதுவர்.54 வட்டவடிவமான இக்கருவறை அமைப்பு பழங்கோயில்களில் 1. காஞ்சீபுரம் கரபுரீசுவரர் தமிழ்நாட்டின் கோயிலிலும் 2. புதுக்கோட்டை நார்த்தாமலை விசயாலயச் சோழீசுவரம் கோயிலி லும் 3.அழகர்கோயில் கள்ளழகர் கோயிலிலும் மட்டுமே உள்ள தென்று சீனி.வே.கூறுகிறார். இவற்றுள் காஞ்சிபுரம் கரபுரீகடை ரர் கோயிலில் பௌத்தச் சாயல்களைத் தான் தேரில் கண்டதாக சீனி.வே. ஆய்வாளருடன் நடத்திய கலந்துரையாடலில் கூறினார் மிகு கோயில் ஆய்வின் பகுதியாக அது அமைந்த பகுதியினை ஆய்வு செய்ய வேண்டுமென்பர் சுரேஷ் பி. பிள்ளை.97 விசயாலயச் சோழீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/30&oldid=1467885" இலிருந்து மீள்விக்கப்பட்டது