பக்கம்:அழகர் கோயில்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 அழகர்கோயில் சுவரம் கோயிலையடுத்து வலப்பக்கத்திலுள்ள குடபோகக் கோயிலின் பெயர் சமணக்குடகு என்றும், பிற்காலத்தில் அது வைணவக் கோயிலாக மாறியதென்றும் எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் கருது வதை முன்னர்க் கண்டோம். அழகர்கோயில் பற்றிய சீனி வே. யின் கருத்தினையும் கண்டோம். எனவே வட்டவடிவக் கருவறை அமைப்புடைய மூன்று கோயில்களும் ஐயத்துக்கிடமான சில கூறுக னைப் பெற்றிருக்கின்றன. அழகர்கோயிலில் வட்டவடிவமான கருவறையைச் சுற்றி அதனுள்ளேயே வட்டவடிவில் ஒரு திருச்சுற்றும் (பிரகாரம்) உள்ளது. பௌத்த சைத்தியங்களைச் சுற்றி இவ்வாறு வட்டவடிவத் திருச் சுற்று உண்டு என்றும், 'துறவிகள் கூடி வாழும் விகாரைகளை யொட்டி, பெரும்பாலும் சைத்தியங்களிருக்கும்' என்றும் பர்கீஸ்" (Burgess) கூறுவர். 29 எனவே சைத்தியத்தை ஒட்டிய துறவிகள் வாழும் விகாரைகளில் நந்தவனமும் குளமும் இருக்க வேண்டும். அவ்வாறிருந்தால்தான் பிழை செய்த ஆண் துறவிகள் பிராயச் சித்தமாக நந்தவனத்துக்கு நீரிறைக்கவும், பெண் துறவிகள் கோயில் முற்றத்துக்கு மணற்சுமக்கவும் கூடும். 2. 12. தலைமழிக்கும் வழக்கம் : இக்கோயிலில் அடியவர்கள் தலையினை மொட்டையடித்துக் (மழித்துக்) கொள்கின்றனர். தமிழ்நாட்டுச் சைவ வைணவ நூல்களில் தலையினை மழிக்க வேண்டும்' என்பது போன்ற குறிப்புக்கள் ஏதும் இல்லை. தலைமுடியினைக் கையினாற் பறித்துக்கொள்ளும் வழக்கம் சமணத் துறவிகளுக்குண்டு. பௌத்தத் துறவிகளே தலை முடியினைக் கந்தி கொண்டு மழிக்கும் வழக்கமுடையவர். பௌத்தத் துறனியின் உடைமையாக அனுமதிக்கப்பட்ட மூன்று ஆடைகள் உள்ளிட்ட எட்டுப் பொருள்களில் மழிகத்தியும் ஒன்றாகும். 60 முடியினை மழித்துக்கொள்ளும் பௌத்தர்களின் வழக்கம் இக்கோயிலில் இன்றும் அடியவர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றது. முடிவுரை: தலை சீனிவே. தரும் இரண்டு சான்றுகளுடன், நரசிம்ம வழிபாடு. பிரயோகசக்கரம், இலக்கிய தலபுராணக் குறிப்புக்கள், கருவறையின் பெயரும் அமைப்பும், தலைமழிக்கும் வழக்கம் ஆகிய செய்திகளும், 'இஃகோயில் பௌத்தக் கே-யிலாக இருந்தது' என்னும் அவர் கருத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/31&oldid=1467888" இலிருந்து மீள்விக்கப்பட்டது