பக்கம்:அழகர் கோயில்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அழகர்கோயிலின் தோற்றம் தினையே நிலைநிறுத்துகின்றன. 25 இம்மாற்றம் எக்காலத்தில் நிகழ்ந்திருக்கலாம் என்று காண் பதற்குச் சான்றுகளில்லை. முதலாழ்வார்களில் பூதத்தாழ்வார் இக் கோயிலைப் பாடியிருப்பதால் அவர் காலத்துக்கு முன்னர் இம் மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். இத்தலம் குறித்த பரிபாடல் பூதத்தாழ்வார் காலத்துக்கு முந்தியதாயிருத்தல் வேண்டும். ஏனெனில் *இருங்குன்றம்' என்ற பெயரை நான்கிடங்களில் வழங்கும் இப் பாடலே, 'சோலையொடு தொடர்மொழி மாலிருங்குன்றம்' என்று ஒரு புதிய பெயர் வடிவத்தைத் தருகின்றது. பூதத்தாழ்வார், 'இருஞ்சோலை' எனக் குறிக்கின்றார். இத்தலத்தினைப் பாடும் ஆழ் வார்கள் 'குன்றம்' எனும் பெயர் வழக்கினைப் பயன்படுத்தவே யில்லை. எனவே இருங்குன்றம் என்னும் பெயர் வழக்கு, இப் பெயரினைக் குறிக்கும் பதினைந்தாம் பரிபாடல் ஆசிரியர் இளம் பெருவழுதியார் காலத்திற்குப்பின் மறைந்துவிடுகிறது. காலத்தில் அல்லது அதற்கும் சற்று முன்னர் இக்கோயில் வைணவக் கோயிலாக மாற்றப்பட்டிருக்கிறது எனக் கொள்ளலாம். குறிப்புக்கள் அவர் 1. 'சோலையொடு தொடர்மொழி மாலிருங்குன்றம்', பரிபாடல், 15: 23. 2. நாலாயிரத்திவ்விய பிரபந்தம், பாடல்கள் 3331,3337. 3. மயிலை. சீனி. வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், ப. 63. 4.Suresh, B. Pillai, Iatroduction to the study of Temple Art, Part I, Chap. 3. p. 60. 5. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம், சோழர் கலைப்பாணி, ப. 42. 6. பி.ஆர்.ஸ்ரீநிவாசன், நாம் வணங்கும் தெய்வங்கள், பக். 49-50. 7. N. Jegadeesan, History of Srivaishnavism in the Tamil Country (post Ramanuja), p. 259. 8. A. Sreedhara Menon, Cultural Heritage of Kerala, pp. 11-12.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/32&oldid=1467890" இலிருந்து மீள்விக்கப்பட்டது