பக்கம்:அழகர் கோயில்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிற்சேர்க்கை II : 7 ராக்காயி வர்ணிப்பு {அச்சிடப்படாதது) சோலைமா மலை சுந்தரராசா அரிநமோ நாராயணா அடர்த்தாய் ரகுராமா ஐயனே கோவிந்தா அச்சு தானந்தா அரிஹரி மாதவா அனைவோர்க்கும் காட்சிதந்த ஐயனேவா கோலிந்தா கரியினிடர் தீர்த்தோன் பக்தர்களை கைதூக்கிவிட்ட கண்ணா 5 கண்ணா மணிவண்ணா பாற்கடல்வாசா கரியமாலே முகுந்தா விண்ணவர்க்காய் கடலை முன்னைநாள் கடைந்த வித்தகா மேகநிறம் போன்ற கண்ணா சிவசிவா நமசிவாயம் சிவனே நமசிவாயம் சிவசிவா என்ற சொல்லைச் சிந்தையிலும் நான் மறவேன் அரிஓம் நமசிவாயம் ஆதிலிங்க நமசிவாயம் 10 அரியும் சீவனை அனுதினமும் நான் மறவேன் அரியை வணங்கீனேன் அப்பாதம் தஞ்ச மென்றேன் சிவனைத் தொழுநேன் சிவன்பாதம் தஞ்ச மென்றேன் சித்தி வினாயகா உன் திருவடியைப் போற்றி செய்தேன் பால சுப்பிரமணியா உன்பாதா ரவிந்தம் பணிந்து உன்னை நான் தொழுதேன் 15 தாயே கலைமகளே சரஸ்வதியே உன்னைத் தாள்பணிந்து தெண்டனிட்டேன் அந்தி பகல் அறுபதி நாழிகையும் முந்தித் தவங்கிடந்து முன்னூறு நாட் சுமந்திருந்து தொந்தி சரியச்சரியத் துடை நடிங்கிப் பெற்றெடுத்த மாதா பிதா அவர் மலரடியைப் போற்றி செய்தேன் 20 குருவைப் பணித்தேன் குருபாதம் போற்றி செய்தேன் எல்லை வணங்கினேன் எல்லை காக்கும் எங்கள் எஜமானைத் தஞ்சமென்றேன் மண்றை வணங்கினேன் எங்கள் மண்டு ஆரப்பாளையம் காக்கும் ஆதிசடாமுனியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/329&oldid=1468209" இலிருந்து மீள்விக்கப்பட்டது