பக்கம்:அழகர் கோயில்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

324 அழகர்கோயில் 45 கருப்பன் வலதுபுறம் ராக்கு இடதுபுறம் இந்த விதமாகவே ராக்காயி அம்மன் சிறப்பு சீராகப் பாடுகிறேன் இந்தப் பதியில் இருபுறமும் நதி ஓட இருக்கும் பச்சிகளும் தானெழுந்து எக்கும்பலாய்க் கூடி அடர்ந்து நீரில் குளித்து ஆனந்தங் கொண்டெழுந்து வீண்ணில் பறந்துவந்து ராக்கப்பன் சாவடியில் வெகுவேக மரகத் தானமர்ந்து அரிஅரி யென்றே ஓலமிடக் கேட்டு என்ஆசான் அவரெழுந்து இடையினில் கமண்டலத்தைத் தான்பீடித்து வேகவதி தனிலே 50 அமர்ந்து நீரில் தான்குளித்து ஆனந்தங் கொண்டெழுந்து பூசை முதலான அத்தனையும் முடித்து நேமமுடன் நிமிசமதில் இடையினிற் பணிபூண்டு நித்ய பரிபூர ணமாய் சாமமொடு ருக்குஜுர் அதர்வணம் என்றுரைக்கும் சதுர்வேத ஆகமமும் தாமகளைப் போற்றிசெய்து நல்லகொடி நாட்டிக் கருட மேடை யின் மேல் 55 அமர்ந்து கனி தொடுத்து தொடுத்ததோர் பாடலதை ஆழிய லைபோல் சபையில் தெரிந்தவரை பாடி வைத்தார் என்ஆசான் சிரிமொட்டையக் கோன் தெளிதமிழாய் விஞ்சை படியாய்ப் புகன்று குதுகலமாய்ச் சிலகாலம் தளராது தொன்றுதொட்டுப் பிச்சையான் பெற்றுத் தனயன் வந் தேன் மாசபைக்கு நாவால் வரும்பிழைகள் ஊகித்துணரும் நாவலரும் பாவலரும் 60 ஓர்ந்து ஒருமனதாய்க் கேட்க அவை கூறுகிறேன் அந்தக் கோபாலன் பொன்னடிக்கே கருந்தேன் ஒழுகுதாம் அழகமலைக் காடு-என்னைப் பெத்தா ராக்கு நீயிருக்கும் கல்வமிரத் தொட்டியிலே செந்தேன் ஒழுகுதாம் செம்பவள வாயழகி செகநாதன் தங்கச்சி செல்வி ராக்காமி நீயிருக்கு மந்தச் சித்ரவர்ணத் தொட்டியிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/331&oldid=1468211" இலிருந்து மீள்விக்கப்பட்டது