பக்கம்:அழகர் கோயில்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ராக்காயி வர்ணிப்பு 325 மலைத்தேன் ஒழுகுதாம் மாதாளரசி நீயிருக்கும் மாசிமலைக் காடு மாணிக்கத் தொட்டியிலே பசுந்தேன் ஒழுகுநாம் பாரமலைக்காடு பத்தினியாள் ராக்காயி நீயிருக்கும் பவளவர்ணத் தொட்டியிலே 65 தீர்த்தம் ஒழுகுதாம் தேக்கமலைக் காடு திருமாலுட தங்கை விருக்கும் அந்த தேக்கமலைப் பண்ணை திரு:மஞ்சனத் தொட்டியிலே பத்தினியாள் ராக்காயி பாரமலைக் காடு பளிங்குவர்ணத் தொட் டியிலே பாங்குடனே குலவையிட்டாள் குலவைச்சத்தம் தான்போட்டு கோம்பைமலைக் காடு கோல வர்ணத் தொட்டியிலே குடியிருந்தாள் ராக்காயி சிட்டுவந்து நீரருந்தும் செல்ல மலையாளி கருப்பன் கூடப்பிறந்த ராக்காவி நீயிருக்கும் சித்ரமணித் தொட்டியிலே பச்சிவந்து நீரருந்தும் பாரமலைக் காடு பாரளந்தோன் தங்கை யிருக்கும் பஞ்சவர்ணத் தொட்டியிலே 70 மயிலுவந்து நீரருந்தும் மாதாளிருக்கும் மாசிலைக் காடு மஞ்ச வர்ணத் தொட்டியிலே குயிலுவந்து நீரருந்தும் கோம்பைமலைக் காடு கருப்பன் கூடப் பிறந்த ராக்காயி நீயிருக்கும் அந்த குளிர்ந்தவனத் தொட்டியிலே அன்னம்வந்து நீர்குடிக்கும் அருவிமலைக் காடு அன்னக்கிளியால் அருங்கிளியான ராக்கு நீயிருக்கும் அழகுவர்ணத் தொட்டியிலே தீர்த்தம் குறித்தநுமே திருமாலுட தங்கச்சி திருமஞ்சன நீராட 75 குளித்து நீராடினாள் கோவிந்தன் தங்கை கோலவர்ணத் தொட்டியிலே வாகுடனே தானெழுந்து வாரிக் குளித்தாளாம் வச்சமணித் தொட்டியிலே குளித்து முழுகியங்கே கோலவர்ணத் துகிலுடுத்தி கோவிந்தன் தங்கச்சி கோதி பயிருணத்தி கோடாலிக் கொண்டையிட்டு குங்குமப் பொட்டுமிட்டு வாரி மயிருணத்தி வலமலைக் காட்டி வச்ரமணிக் கொண்டை யீட்டாள் 80 தாரி மயிருணத்தி தலமலைக் காட்டி வச்ரமணிக் கொண்டை யிட்டாள் அள்ளி மயிருணத்தி அழகுவர்ணக் கொண்டையிட்டாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/332&oldid=1468212" இலிருந்து மீள்விக்கப்பட்டது