பக்கம்:அழகர் கோயில்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ராக்காயி வர்ணிப்பு 200 குலவைச் சத்தங் கேட்டவுடன் கருப்பன் 331 கொண்டாட்டங் கொண்டெழுந்து தங்கயரே வாருமம்மா அண்ணன் பதினெட்டாம் படிக்கதவு பகுமானம் பார்வையிட சுப்பக்கோன் பச்சக்கோன் நாட்டிவச்ச கதவழகப் பாத்து கட்டழகி ராக்காயி மக்களா உங்கமாமன் கதவழகு மகுத்துவத்தப் பாருங்களென்று பாலருக்கு கதவழகக் காட்டி பாரமலை போரேனென்று 205 மலையாளியிடத்தில் பாங்காகச் சேதிசொல்லி குழந்தைகளைக் கூப்பிட்டு மாமனுடகதவு குடவரைக்கதவு குளிர்ந்தமுடன் பாருங்களென்றாள் தெற்குக் கதவுலே திருமாலுட அம்சமாம் வடக்குக் கதவுலே வாமனர் அம்சமாம் பக்கக் கதவுலே பகவான் அம்சமாம் 210 பெரிய கதவுலே பெருமாள் அம்சமாம் அண்ணனுட அம்சமும் அந்தக் கட்டையினால் சேகரித்து கணக்குடனே நாட்டிவைத்த கருப்பனுடைய கதவ ராக்காயி கண்டு மனமகிழ்ந்து கதவழகத் தான்பார்த்து சிரித்து மனமகிழ்ந்து செம்பன்மாரோட செல்வப் படியழகு தான் பார்த்து 215 பதினெட்டாம் படிக்கு முன்னே பாலர்களோடு பார்த்து குலவையிட்டாள் குலவைச்சத்தம் கேட்டவுடன் கருப்பன் கொண்டாட்டங் கொண் டெழுந்து அண்ணா எனக்கு கரந்தமலைத் தீர்த்தமும் கருப்பையா எனக்கு காத்தட்டி வத்தலும் கானெல்லுச் சோறும் கருங்குட்டி ரத்தமும் காட்டுத் துளசிக்கும் கானகத்துத் தீர்த்தத்துக்கும் கதம்ப நல்ல மாலைக்கும் 220 கல்லுங் காவேரி புல்லும் பூமி உள்ளவரை சூரியாள் சந்திராள் உள்ள பரியந்திரம் இந்தக் கதவடியில் காத்திருத்து கரத்துமே உனக்கு தொட்டியிலே முந்தாமல் வட்டிலிலே சிந்தாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/338&oldid=1468218" இலிருந்து மீள்விக்கப்பட்டது