பக்கம்:அழகர் கோயில்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

3. இலக்கியங்களில் அழகர்கோயில் 3.0. தமிழ்நாட்டு வைணவத் திருப்பதிகளில் திருமாலிருஞ் சோலை என்னும் அழகர்கோயில் பழமைசான்ற ஒரு திருப்புறியாகும். இத்தலத்தினைப் பற்றிய செய்திகள் தமிழ் இலக்கியங்களில் விரி வாகக் காணப்படுகின்றன. 3.1. இலக்கியங்களில் அழகர்கோயில்: 3.1.1. பரிபாடலும் சிலம்பும்: சங்க இலக்கியத்தில் பெயர் சுட்டப்பெறும் ஒரே ஒரு வைண வத்தலம் இதுவேயாகும். பரிபாடலில் புலவர் இளம்பெருவழுதியார் இத்தலத்தினை 'மாலிருங்குன்றம்' என்று குறிப்பிடுகின்றார். 1 சிலப் பதிகாரம் இக்கோயிலமைந்த மலையினைத் 'திருமால் குன்றம்' என வழங்குவதோடு, இக்கோயிலினையும் குறிப்பிடுகின்றது. 8 3.1.2. ஆழ்வார்களின் பாசுரங்கள்: ஆழ்வார்களில் ஐவர் இக்கோயிலைப் பாடியுள்ளனர். முதலாழ் வார்களில் ஒருவரான பூதத்தாழ்வாரும், பெரியாழ்வார். ஆண்டாள், நம்மாழ்வார். திருமங்கையாழ்வார் ஆகியோரும் மொத்தம் நூற் றெட்டுப் (108) பாசுரங்களில் இக்கோயிலைப் பாடியுள்ளனர். பெரியாழ்வார் மூன்று திருமொழிகளும், ஆண்டாள் ஒரு திருமொழியும், நம்மாழ்வார் நான்கு திருமொழிகளும், திருமங்கை யாழ்வார் இரண்டு திருமொழிகளும் இக்கோயிலின் மீது பாடியுள் ளனர். பூதத்தாழ்வார் இரண்டு பாசுரங்களில் மட்டும் இத்தலத்தி னைக் குறிக்கின்றார். பூதத்தாழ்வார் தவிர்த்த நால்வரும் பிற பாசுரங்களிலும் இத்தலத்தினை மொத்தம் பதினான்கு இடங்களில் குறித்துள்ளனர்.' 3.1.3. ஆசிரியர் பெயர் அறியப்பட்ட சிற்றிலக்கியங்கள்: ஆழ்வார்களுக்குப் பின்னர் இத்தலம் குறித்துச் சிற்றிலக்கியங் கள் பல எழுந்தன. அவற்றுள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/35&oldid=1467893" இலிருந்து மீள்விக்கப்பட்டது