பக்கம்:அழகர் கோயில்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொழில் அட்டவணை 345 பர்த்து வருகிறது. நித்தியப்படி, விசேஷப்படி, பஞ்சபர்வம், புண்ணிய காலங்கள் பெருமாள். தாயார், முதலிய சுற்றுக்கோவில் திருநாமங்கள் மாச திருநக்ஷத்திரம் அதிகப்படி புறப்பாடு உத்ஸவாதிகள் முதலிய தினங்களிலும் எல்லா அர்ச்சகர்களும் சாதக அர்ச்சகருடன் கூட இருந்து அலங்கார திருமஞ்சனம், சாத்துப்படி திருக்கோலங்கள் முதலியது சாத்தி விசேஷ உபசார சிரமத்துடன் புறப்பாடு செய்விக் கிறது. துவார பாலகாள். துவார கன்னிகைகள் முதலானவர்களுக்கும் திருமஞ்சனம் செய்கிறது. வருஷ முறை வீதம் ரக்ஷாபந்தனம் கட்டிக் கொள்கிறது. எல்லா வாகனங்களிலும் ஏறிவருகிறது. நித்தியப்படி முறைகார அர்ச்சகர் பரிசாரகர் ஒப்புக்கொள்ளுகிற வெள்ளிப் பாத்திரம், திருவாபரணம் திருப்பரிவட்டம், வகையறா சாமான் களை கணக்கில் கையெழுத்து வைத்து ஒப்புக்கொண்டபடிக்கி அடுத்த முறைகாரரிடம் கணக்கில் கையெழுத்து வாங்கி ஒப்புவிக் கிறதும் வித்யாஸம் முதலியது ஏற்பட்டால் முறைகார அர்ச்சகர் பரிசா ரகர் உத்தரவாதம் செய்கிறது. ஸ்ரீரெங்கறாஜ பட்டர் அலங்கார பட்டர். இருவருக்கு மட்டும் ஸ்தானீகம் கருவேலம் கையாக்ஷி கருவேலம் கையாக்ஷி சங்க முத்திரை கணக்கில் ஏற்பட்டிருப்பதால் முறை வீதப்படி முகரை வைத்துக்கொண்டு நித்தியப்படி விசேஷப்படி முதலிய புறப்பாடு உத்ஸவங்களுக்கு மைத்த ஸ்தானீகர்களையும் கூடவைத்துக் கொண்டு கருவேலம் அஞ்சு முகரையும் சரிபார்த்து திறந்து வேண்டிய திருவாபரணம், திருப்பரிவட்டம், வகையறா எடுத்து கணக்கில் எழுதிக்கொண்டு சாத்துப்படி சாத்துகிற பிரதான அர்ச்சகரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு கொடுத்து திரும்பவும் கணக்குப்படி வாங்கி கருவேலம் அறையில் சேர்ந்துப்பூட்டி மைத்த முகறோடுசங்கமுகள் போட்டு வருகிறது. லாபநஷ்டத்துக்கு ஸ்தானீ காள் 7 பேர்களும் தேவஸ்தானத்துக்கு உத்தரவாதம் செய்கிறது. ஸ்தானிக் காரியாதிகளையும் கூட இருந்து பார்த்து வருகிறது. சந்நதி முறைகார அர்ச்சகர் ஒரு குச்சிலும் பரிசாரகன் ஒரு திறவு கோலும் வைத்துக்கொள்ளுகிறது. தல்லாகுளம் சந்ததி அர்ச்சக கைங்கரியத்தையும் முறைவீதம் பார்த்து வருகிறது. (2) சந்ததி பட்டத்து ஜீயாள் மாசம் 30 நாளைக்கும் 1} நிர்வாகம் சந்நதிக்கி முதன்மையான நிர்வாஹகறாய் இருந்து ஸ்ரீகாரியம் விசாரணை, தர்மகர்த்துருத்வ விசாரணை, அறைகட் டளை, சிறுகுடி கட்டளை வகையறா, சந்நதி கிறாம விசாரணை, சந்நதி ஸ்ரீபண்டாரம், கருவேலம், கெர்ப்பகிரஹம், அறைவாசல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/352&oldid=1468233" இலிருந்து மீள்விக்கப்பட்டது