பக்கம்:அழகர் கோயில்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொழில் அட்டவணை 349 படியாயும் ராஜ உபசார கிரமத்துடன் அருளிப்பாடிட்டு சன்னதி பரிசாரகத்துக்கு ஏற்பட்ட சகல கைங்கர்யங்களையும் பார்த்து வருகிறது. திருப்பரிவட்டம் முறை வீதப்படி யாவற்று சன்னதி களுக்கும் திருத்திக்கொடுத்தும் வேண்டும் சாத்துப்படி அறைத்து கொடுத்தும் வேண்டிய சாமான் முதலியதுகளை சந்ததியிலிருந்து வாங்கிக்கொண்டுபோய் குடுத்தும் வருகிறது. சூக்தாதி உபநிஷத்து விண்ணப்பம் பிரபந்தம் சேவிக்கிறது. தீர்த்த பிரசாதம் வினியோகிக் கிறது. பரிவட்டம் கட்டி சேவை செய்து வைக்கிறது. அருளிப் பாடுவகையறா சொல்லுகிறது. நித்தியப்படி முறையில் முறைகார அர்ச்சகர் ஒப்பந்தம் சன்னதிதோரும் ஒரு திரவுகோல் முறை வீதம் வைத்துக்கொண்டு கணக்கில் கையெழுத்து வைத்து ஒப்புக்கொண்ட பாத்திரம் பரிவட்டம் வகையறா சாமான்களை அடுத்த முறை காரரிடம் கையெழுத்து வாங்கி ஒப்புவிக்கிறது. இந்தப்பிரகாரம் 10 நிர்வாகக்காரர்களும் எப்பவும் சந்நதியில் கார்த்திருந்து கைங் கர்யம் பார்த்து வருகிறது. நித்தியப்படி விசேஷப்படி உத்ஸவாதி முதலிய புறப்பாட்டு அவசரங்களுக்கொல்லாம் நித்திய உத்ஸவர் முதலிய பெருமாள் தாயார் முதலிய திருநாமங்களுக்கு சன்னதி பரிசாரகம் அமுதார் திருமேனி உபசாரமாக கீழே இருந்தும் திருப் பல்லக்கு முதலிய வாகனங்களிலிருந்தும் உபய சத்தரம் உபசாரத் துடன் போட்டு வருகிறது. உபய திருமேனி சேவிக்கிறது. உபய திருவாலவட்டம் விசேஷ உபசாரத்துடன் பரிசாரகம் அலங்கார நம்பி போட்டு வருகிறது. உபயகுஞ்சம் பாவாடை உபசாரத்துடன் போட்டு வருகிறது. திருமாலிருஞ்சோலைமலை நம்பியை சேர்ந்தது. உபய காளாஞ்சி வகையறா எடுத்து வருவதும் வண்டி வாசல் கிரமித்ததின் பேரில் வருஷமுறை வீதம் சடகோபம் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வருகிறதும் பரிசாரகம் சடகோப நம்பியை சேர்ந்தது. பெரிய கலசப்பானை சாமான்கள் எடுத்து வகையறா உபசார வருவது சேனை நாறாயண அமுதாரை சேர்ந்தது. சந்நதி பரிசாரகம் திருமலை நம்பி உபய திருவெண்சாமரம் அலங்காரத் தளிகை திருமஞ்சனம் தைலக்காப்பு வகையறா எடுத்து வரும்போது கீழே இருந்தும் திருப்பல்லக்கு முதலிய வாகனங்களில் நின்று கொண்டும் உபய திருவெண்சாமரம் போட்டு வருகிறது. வருஷமுறை வீதம் ஸ்ரீசடகோபம் எழுந்தருளப்பண்ணுகிறது. பெரிய வெள்ளிப் படிக்கம் அடப்பம் கட்டிக்கொண்டு வருகிறதும் கற்பூரத்தட்டு சாமாள்கள் கொண்டு வருகிறது சோலை நம்பியை சேர்ந்தது. உபய ஈயோட்டி போடுகிறதும், உபய கண்ணாடி பிடித்து வகையறா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/356&oldid=1468239" இலிருந்து மீள்விக்கப்பட்டது