பக்கம்:அழகர் கோயில்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொழில் அட்டவணை 953 புள்ளியிலிருந்து சேஷம் வைக்காமல் பூறாந்தளிகை வகையறாவை சிரமப்படி உபசார கிரமத்துடன் கொண்டு வருகிறது துவார பாலகாள் துவாரகன்னிகள் சதிறிள மடவார் நாச்சியார் படிவாசல் அனுமார் பதினெட்டாம் படிவாசல் முதலியதுக்கும் தனிகை முத லானது கொண்டுபோய் வருகிறது. நித்தியப்படி விசேஷப்படி உபயப்படி கட்டளைப்படி உத்ஸவாதி முதலிய விசேஷ தினங்களிலும் கைங்கரிய இரண்டு நிர்வாகக்காரர்களும் சேர்ந்து நித்தியப்படி பறாளுடன் கூட அதிகப்படியாக (பத்து) மனுஷாளையும் கூட வைத்துக் கொண்டு நாச்சியார் பரிகரத்துக்குச் சேர்ந்த சகல கைங் கரியங்களையும் ஆசார விவகாரமாய் பார்த்து வருகிறது. சிறுகுடி கட்டளைக்காக இருமுறைக்காரர்களுக்கும் தனித்தனியே இரண்டு கிராமங்கள் விடப்பட்டிருக்கிறபடியால் முன் சொல்லியிருக்கிறபடி ஒவ்வொரு முறைக்காரரும் இரண்டு மனுஷ்யாளை வைத்துக் கொண்டு இந்த கட்டளைக்காக பிரத்தியேகமாய் பிரதி தினமும் ஒரு குடம் திருமஞ்சனம் நூபுரகெங்கையிலிருந்து கொண்டுவரு கிறதும் விசேஷப் படிகளுக்கு இரண்டு முறைகாரர்களும் சேர்ந்து அதிகப்படி ஆள்வைத்துக் கொண்டு திருமஞ்சனம், தளிகை வகையற கொண்டு வருகிறதும் நாச்சியார் பரிசுரத்தைச் சேர்ந்த யாவற்று கைங்கரியங்களையும் இந்த கட்டளைக்காக முன் சொல்லியிருக்கிற பிரகாரம் யாவற்று கைங்கரியங்களையும் பார்த்து வருகிறது. நித்தியப்படியிலும் விசேஷப்படியிலும் சந்ததி திட்டமாயும் கட்டளை திட்டமாயும் உபயப்படியாயும் பெருமாள் அமுது செய்த தளிகை பிரசாதம் திருப்பணியாரம் வகையறாவை கோஷ்டியில் வினியோகம் செய்கிறதும் கைங்கரியபறாளுக்கும் சிலவு செய்யக்கூடிய தளிகை பிரசாதம் வகையறாவை திருமடப்புள்ளி சம்மந்த மன்னியில் பிரத்தி யேகமாய் ஏற்பட்டிருக்கும் அறையில் வைத்துக்கொண்டு இந்த சந்நதி பட்டத்து ஜீயாள் கங்காணத்தின் பேரில் சகல சிலவும் பண்ணி வருகிறது. சில்லரை அரை கட்டளை காரியாதிகளையும் இருமுறைகாரர்களும் பார்த்து வருகிறது. திருமடப்புள்ளி பாத்திரம் வகையறா சாமான்களை முறைவீதம் சுத்தி பண்ணுகிறது. திரு மடப்புள்ளி அமுதுபாறை தொட்டி. வகையறாக்களையும் பிரதி காலமும் சோதிக்கிறது. இந்த பிரகாரம் தல்லாகுளம் கோவில் கைங்கரியங்களையும் பட்டை விருத்தி மானிபத்தை அனுபவித்துக் கொண்டு இருமுறை காரர்களும் பார்த்து வருகிறது. நாச்சியார் பரிசுரத்தார் கையாக்ஷியிலிருக்கிற பாத்திரம் வகையறா சாமான்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/360&oldid=1468243" இலிருந்து மீள்விக்கப்பட்டது