பக்கம்:அழகர் கோயில்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

356 அழகர்கோயில் களைப் பார்த்து வருகிறது. ஸ்தல வழக்கப்படி பிரதான நாட்டார் ஜமீன்தார் வகையறாக்களுக்கு சந்நதி விசேஷாதிகளுக்காக பத்திரி க்ைகள் எழுதி பிரதான பட்டத்து ஜியாளிடம் கையெழுத்து வாங்கி அனுப்புகிறது. (10) சந்நதி ஸ்தா னாபதி நிர்வாகம் ஒன்னு, மாசம் 30 நாள் பூறாவுக்கும் சந்ததியில் எப்பொழுதும் காததிருந்து தன்னுடன் உதவிக்கு இரண்டு மனுஷாளையும் கூட வைத்துக்கொண்டு சந்த திக்கு வேண்டிய நித்தியப்படி ள்க்ஷேப்படி உத்ஸவாதி முதலிய விசேஷ தினங்களுக்கும் சாமான்களை வெளியிடங்களுக்குப்போய் வாங்கிக்கொண்டு வந்து சேர்க்கிறது. சந்ததி காரியாதிகள் திருப்பனி மறாமத்துகளை குறிந்தும் முன்னாடி எச்சரீக்கையாக இருந்தும் ஜீயாளுக்கும் ஸ்தானீகாளுக்கும் தெரிவித்து கூட இருந்து கண்பார்த்து வருகிறது. ஜீயால் ஸ்தானீகாளுக்கும் ஒவ்வொரு சமயங்களுக்கும் சமயம் தெரிவிக்கிறது நதி சீராம வருமான சகல வருமான ஆமிஷம் யாவற்றையும் எப்பவும் இராப்பகலாக கார்த்திருந்து காவல் காத்துக் கொண்டு வருகிறதும் அந்தந்த வேலைக்காரர்களை கொண்டு ஸ்ரீகாரியம் ஜீயாள் நியமனப்படி சரியாக நடத்தச் செய்கிறதும் உத்திரவாதம் செய்கிறதும் அவசியமானால் கிராமங்களுக்குப் போய் வந்து கிறாம காரியம் பார்த்து வருகிறதும், வாங்கிக் கொடுக்கிற சாமான்களில் வித்தியாசம் ஏற்பாட்டால் உத்திரவாதம் செய்கிறது. (11) திருவிளையாட்டான் நிர்வாகம். மாசம் 30 நாள் பூறா வுக்கும் சந்நதியில் எப்போதும் கார்த்திருந்து தன்னுடன் கூட உதவிக்கு இரண்டு மனுஷியாளை வைத்துக்கொண்டு சந்நதி கிறாம் ஆமிஷங்களை வசூலித்து குடுத்து வருகிறதும் சர்க்காருக்கும் தேவஸ் தானத்துக்கும் விபரமாக சுணக்கு ஒப்புவிக்கிறது. சந்ததி பசுமாடு வகையறாக்களை கண்பார்த்து இரண்டு வேளையும் பெருமாளுக்கு பால் கறந்து கொடுக்கிறது. தைமீ2 உ கனுவின் போது திருச்சுத ளிக்கு பொங்கல்வைத்து திருச்சுறவை திறந்துவிட்டு மறுபடி சந் நதியில் கொண்டு வந்து சேர்க்கிறது. மாசி மீ சிலராத்திரியில் படி வாசல் முதலான சுற்றுப்படை தேவதாந்திரங்களின் பூசாரிகளுடன் கூடயிருந்து கரகங்கள் எடுத்து வருவதை கண்பார்த்துக்கொண்டு சரியானபடி சேரும்படி செய்கிறது. சந்நதி குடைசுருட்டி வகையறா வெளி ஜோடனை சாமான் களை வெயிலில் காயப்போட்டு எடுத்து வைத்து அடிக்கடி கண்பார்த்து வருகிறது. நித்தியப்படி நித்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/363&oldid=1468246" இலிருந்து மீள்விக்கப்பட்டது