பக்கம்:அழகர் கோயில்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

£58 அழகர்கோயில் வாகனங்களுக்கு எச்சரிக்கையாயிருந்து வேண்டிய ஆள்களை வைத் துக்கொண்டு ஜாக்கிருதையாய் ஸ்ரீபாதம் தாங்கி வருகிறதும் உத்திர வாதம் செய்கிறது. (!1) சின்ன மேளம், பெரிய மேளம் வகையறா நிர்வாகம் ஒன்றுக்கு மாசம் 30 நாள் பூறாவும் கோவிலிலிருந்து நித்தியப்படியி லும். விசேஷப்படியிலும் உத்ஸவாதி முதலிய விசேஷதினங்களிலும் திருவாராதனம், அலங்கார திருமஞ்சனம், புறப்பாடு. படியேற்றம் உபசார அவசரம் முதலிய யாவத்து அவசரங்களுக்கும், சந்நதி தாசி கள் அனைவரும் சின்ன மேளம் உபசாரத்துடனும், ஆடல்பாடல் வகை யறா செய்கிறது. குடவிளக்கு சுத்தி வருவதும், பெரிய மேளம் வகை யறாவுக்கு பன்னிரண்டு பேர்கள் வைத்துக் கொண்டு காலாகாலங் களிலிருந்து அவசரங்களுக்கு தக்கப்படி பெரிய மேளம். திருச்சின்னம். எக்காளம், கவுரி,சங்கம் முதலிய அங்கங்களுடன் வாத்திய கோஷங்க ளுடனே எல்லோருமிருந்து பார்த்துவருகிறது. ஆக மொத்தம் சந்நதி நிர்வாகம் 32 (15) இந்த சந்ததியில் அனாதியாய் ஏற்பட்டு கணக்கில் கண் டிருக்கிற பிரகாரம் 1. தை மீ சட்டத்தேர் உத்ஸவம் நாள் 10 2. மாசி மீ தெப்ப உத்ஸவம் நாள் 10 3. பங்குனி மீ ஊஞ்சல் திருக்கல்யாணம் உத்ஸவம் நாள் 10 4. சித்திரை மீ கோடை திருநாள் 10 5. வைகாசி மீ வசந்த உத்ஸவம் தாள் 10 6. ஆனி மீ பெரிய பெருமாள் பரமஸ்வாமி ஜேஷ்டாபிஷேகம் 7. ஆடிமீ திருத்தேர் உத்ஸவம் நாள் 10 8. ஆவணி மீ திருப்பவித்ரோத்ஸவம் நாள் 10 9. புரட்டாசி மீ" நவறாத்திரி நாள் 9 10. அற்பசிமீ யெண்ணைகாப்பு உத்ஸவம் நாள் 10 11. கார்த்திகை மீ” திருக்கார்த்திகை தீப உத்ஸவம் நாள் 1 12. திரு அத்தியயனோத்ஸவம் பகல் பத்து இராப்பத்து, விசே டிப்படி விஜயதசமி புறப்பாடு, கோகிலாஷ்டமி உறியடி புறப்பாடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/365&oldid=1468248" இலிருந்து மீள்விக்கப்பட்டது