பக்கம்:அழகர் கோயில்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிற்சேர்க்கை I[] : 4 ஆடவிசேஷம் - கோடைத்திருநாள் சித்திரைப்பெருந்திருவிழா ஒவ்வொரு வருஷமும் சித்திரை மாதம் சுக்கிலபக்ஷம் ஏகா தசியன்று கோடைத்திருநாள் ஆரம்பம். அன்று முதல் காலை ஸ்ரீ உத்ஸவர் பெருமாளுக்கு திருமஞ்சனமாகி கோடைத்திருநாளுக்காக ரக்ஷாபந்தனம் (பொற்காப்பு) செய்வித்து மாலை 6 மணிக்கு மேல் சாயான சுத்துக் கோவில்' முடித்தபின் அர்ச்சகர்கள் கையாக்ஷி சேவில்' திருவாபரணங்கள் ஒப்புக்கொண்டு பெரிய தோளுக்கினி யாவில் பெருமாளை எழுந்தருளச் செய்து அலங்காரம் செய்து புறப்பாட்டுத் தளிகை அமுதுசெய்து அதிகாரிகள் சேவித்து சீர் யாதம் தாங்குவோர் மரியாதையாகி பிராமணசீர்பாதமாக பெரிய பிராகாரம் எழுந்தருளச் செய்து ஆழ்வார் சன்னதியில் இயல்' துடக்கம்' தீர்த்தம் சடாரி கோஷ்டிக்கு' சாதித்து குடவரை10 வழியாக வெளியில் நாயக்கர் கல்யாண மண்டபத்திற்கு எழுந்தரு ளச் செய்து திருவாராதனம், தித்யானுசந்தான சேவை, தளிகை அமுதுசெய்து சாற்று முறையாகி தீர்த்தம், சடாரி. பிரசாத விநி யோகம் கோஷ்டி கிரமமாக நடைபெறும். பின் பெருமாளை எழுந் தருளப்பண்ணி உடையவர் சன்னதியில் இயல் சாற்றுமுறை தீர்த்தம் சடாரியாகி, சன்னதிக்குள் எழுந்தருளி அதிகாரிகள் சேவித்து அலங்காரம் களைந்து கையாக்ஷி திருவாபரணங்களை ஒப்புவித்து சம்பாக்காலம்" நடைபெறும். ஷை உற்சவம் இரண்டாம் நாளன்றும், மூன்றாம் நாளன்றும் மேல்கண்டபடி உற்சவம் நடைபெறும். ஷ உற்சவம் நான்காம் நாள் ஸ்ரீபெருமாள் மதுரைக்கு சித்திரா பௌர்ணமி உற்சவத்திற்காக சவா ரியாக போகவேண்டியதற்கு கோவில் காலங்கள் இரவு ஆரம்பிக்கப் படும். வழக்கம்போல் சுப்ரபாதம் விஸ்வரூபம் வகையறா சுத்துக் கோவில் வரை பூஜை காலங்கள் நடந்தபின் ஸ்ரீபெருமாளை தெற்குப் படி ஏற்றத்தில் படி வழியாக சவாரி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கையாக்ஷிசேவில் அ.பட்டர்12 திருவாபரணங்களை ஒப்புக்கொண்டு பெருமாளுக்கு கள்ளர் திருக்கோலம் சாத்தி உச்சிக்காலம் நடைபெறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/368&oldid=1468251" இலிருந்து மீள்விக்கப்பட்டது