பக்கம்:அழகர் கோயில்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

30 அழகர்கோயில் தொடக்கத்தில் வாழ்ந்தவரெனத் தெரிகிறது.' திருமாலிருஞ்சோலை பிள்ளைத்தமிழ் கி. பி. 1923இல் நூலாசிரியராலேயே வெளியிடப் பெற்றுள்ளது. அலங்காரர்மாலை 1955இல் திருவல்லிக்கேணி தமிழ்ச்சங்கத்தாரால் வெளியிடப்பெற்றது. இந்நூலின் பதிப்புரை யால், இந்நூல் 1904இல் 'திருமாலிருஞ்சோலை அழகர் பல்சந்த மாலை' என்ற பெயரோடு வெளியிடப்பெற்றதையும், நூலாசிரியர் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவரென்பதையும் அறிய முடிகிறது.10 அழகர் கலம்பக ஆசிரியர் கவிகுஞ்சரமையரின் காலம் அறியப் படவில்லை. ஆசிரியர் பெயர் அறியப்பட்ட இச்சிற்றிலக்கியங்கள் அனைத்தும் அச்சிடப்பட்டவையாகும். 3.1.4. ஆசிரியர் பெயர் அறியப்படாத சிற்றிலக்கியங்கள் : ஆசிரியர் பெயர் அறியப்படாத நூல்களில் 'அழகர் வருகைப் பத்து' என்ற நூல் மட்டும் அச்சிடப்பட்டதாகும். கி.பி. 1953 இல் சக்திவேல் ஆசாரி என்பவர் ஏட்டுச்சுவடியிலிருந்த இந்நூலைப் பதிப்பித்துள்ளார். சென்னை கீழ்த்திசைச்சுவடி நூலகத்திலுள்ள திருமாவிருஞ் சோலைமலை அழகர்மாலை 11 அழகர் அகவல்" என்னும் இரு நூல் களும் அச்சிடப்படாதவை. இவற்றுள் அழகர்மாலை 57 பாடல்களா லாகிய சிறு நூலாகும். கள்ளர் சாதியார்க்கும் அழகர்கோயிலுக்கும் உள்ள உறவைக் குறிப்பிடுவதால் இந்நூல் சுமார் பதினெட்டாம் நூற் றாண்டின் பிற்பகுதியில் தோன்றியிருக்கலாம் எனக்கருத இடமுள்ளது ‘அழகர் அகவல்' இருபத்தெட்டு அடிகளையுடைய அகவற் யாவாகும். முதல் பதினான்கு அடிகள் பொருள் தொடர்புடையன வாக அமைந்துள்ளன. அடுத்த பதினான்கு அடிகளும் பொருள். தொடர்பின்றியும், மூன்றிடங்களில் சிதைந்தும் உள்ளன. முதல் 'பதினான்கு அடிகளுக்குள். திருமால் நீர்நிலையொன் றில் முதலையிடமிருந்து யானையைக் காத்த கதையினைக் குறிப்பிடு வதால், இது திருமாலைப் பாடிய அகவல் எனத் தெரிகிறது. அழகர் கோயில், மதுரை, கூடலூர் (மதுரை மாவட்டம்), சீவலப்பேரி கோயில்குளம், கடையநல்லூர் (நெல்லை மாவட்டம்), உறையூர் (நிருச்சி மாவட்டம்), நாகப்பட்டினம் (தஞ்சை மாவட்டம்), பொன்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/37&oldid=1467895" இலிருந்து மீள்விக்கப்பட்டது