பக்கம்:அழகர் கோயில்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆட்டவிசேஷம். கோடைத்திருநாள் சித்திரைப்பெருந்திருவிழா 365 கையாக்ஷி பெட்டியில் அ. பட்டர் திருவாபரணங்கள் ஒப்புக்கொண்டு திருமஞ்சனம் ஆகி ஷேசவாகனத்தில் ஸ்ரீபெருமாளை அலங்காரம் செய்து பட்டருக்கு அருதிப் பரிவட்டம் மரியாதையாகி பெருமாள் சேஷ வாகனத்துடன் காலை 5 மணிக்கு வண்டியூர் கோவிலை விட்டுப் புறப்பாடாகி வண்டியூர் வழிநடை மண்டபங்களில் கிரமப்படி மண்டபங்களில் மண்டபதாரருக்கு மரியாதை செய்வித்துக் கொண்டு காலை 7 மணிக்கு தேனூர் மண்டபத்துக்கு வந்து சேருதல். தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனம் அலங்காரம் கலைந்து தேனூர் மண்ட பத்தார் செலவில் அலங்கார திருமஞ்சனமாகி கெருட வாகனத்தில் பெருமாளை அலங்காரம் செய்து திருவாராதனம் தளிகை அமுது செய்து தேனூர் மண்டபதாரருக்கு மரியாதை அநிப்பரிவட்டம் மரியாதை செய்தபின் மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசன புராணம் படிப்பதற்காக ஆண்டாருக்கும் பட்டருக்கும் அகுதிப்பரிவட்டம் மரியாதை செய்து மண்டூகபுராணம்0 ஆண்டாரால் வாசித்து பின் பட்டருக்கு அரிதிப்பரிவட்டம் மரியாதையாகி பெருமாள் கெருட வாகனத்துடன் எழுந்தருளச் செயது மண்டூக மகரிஷி தவம் செய்யும் மடுக்கரையில் பெருமாள் சிஷிக்கு காட்சி தந்து கெருடவாகனா ரூடாய் தேனூர் மண்டபத்தை சுற்றிவந்து வழிநடை மண்டபங் களில் வழக்கம் போல் எழுந்தருளி மண்டபதார்களுக்கு மரியாதை செய்வித்து வண்டியூர் ஹனுமார் கோவிலில் மண்டபத்திற்குள் எழுந் தருளியாகி அங்கு பிரார்த்தனைக்காரர்கள் அங்கப்பிரதஷனம் நடந்த பின் மண்டபத்தாரருக்கும் மரியாதை செய்வித்து கோவிந்தராவ் மண்ட பத்தில் பகல் 12 மணிக்கு வந்து தங்குதல். நடை மாலை 4 மணிக்கு கோவிந்தராவ் மண்டபதாரருக்கு மரியாதை செய்வித்து ஷை மண்டபத்தை விட்டு பெருமாள் புறப்பாடாகி வழி மண்டபங்களில் மண்டபதாரருக்கு மரியாதை செய்வித்து பெருமாள் புறப்பாடாகி ராமாராயர் மண்டபமுன் மண்டபதார் பூர்ண கும்பமரியாதையுடன் பெருமாளை எதிர்கொண்டு அழைத்து பின் பெருமாள் மண்டபத்திற்குள் எழுந்தருளச் செய்து பின் மண்டபத்தார் வந்து பெருமாளை சேவித்து பின் கருட வாகன அலங்காரம் கலைந்து திருவாபரணங்களை பண்டாரி கையாக்ஷி பெட்டியில் ஒப்புவித்து அலங்கார திருமஞ்சனமாகி திருவாராதனம் தளிகை அமுதுசெய்து இரவு 9 மணிக்கு, தசாவதார சேவை ஆரம்பமாகும். ஷை மண்டபத்தில் கீழ்கண்ட சேவைகளுக்கு வேண்டிய திருவா பரணங்களை அர்ச்சகர்கள் அவ்வப்போது சவ்வாரி கையாஷியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/372&oldid=1468255" இலிருந்து மீள்விக்கப்பட்டது