பக்கம்:அழகர் கோயில்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

366 அழகர்கோயில் ஒப்புக்கொண்டு 1. முத்தங்கி சேவை42 2. மச்சாவதார சேவை 3. கூர்ம அவதார சேவை 4. வாமனாவதார சேவை 5. ராமா வதார சேவை 6. கிருஷ்ணாவதார சேவை (திருவாராதனம் திருப் பாவாடை சமர்ப்பித்தல்). மாளை ஒவ்வொரு சேவை அலங்காரமாகி திரை வாங்கியவுடன் மண்டபத்தார் வந்து சேவித்து போவதுண்டு. பக்தர்களும் சேவிப் பதுண்டு. மேல்கண்ட சேவைகள் முடிந்தபின் மோகினி திருக்கோ லத்துக்கு வேண்டிய திருவாபரணங்களை கையாக்ஷி பெட்டியில் அர்ச் சகர்கள் ஒப்புக்கொண்டு காலை 5 மணிக்கு மோகினி திருக்கோலம் சாத்தி மண்டபத்தார் வந்து சேவித்தபின் வெளிக்கொட்டகை பத் தியில் சீர்பாதமாக பத்தி உலாத்தி ஆற்றங்கரை வரை எழுந்தருளிய பின் பெருமாள் மண்டபத்திற்குள் வந்து சேர்ந்தவுடன் மண்ட பதார் சேவித்து அதிகாரிகள் சேவித்து மோகனாவதாரம் கலைந்து திருவாபரணங்களை கையாக்ஷி பெட்டியில் ஒப்புவித்து திருமஞ் சனமாக திருவாராதனம் தளிகை, அமுது செய்தபின் சவ்வாகி பெட்டியில் திருவாபரணங்களை அர்ச்சகர்கள் ஒப்புக்கொண்டு பெரு ஆனந்தராயர் பல்லக்கில் 43 ராஜாங்கசேவை அலங்காரம் செய்து ராமாராயர் மண்டபதார் பெருமாளுக்கு பரிவட்டம் முதலிய உபசாரங்களுடன் பெருமாளை சேவித்து வழக்கம்போல் பரிவட்டம் மரியாதைகளை மண்டபத்தார் அதிகாரிகளுக்கு நடத்திவைத்து தானும் மரியாதை பெற்றுக் கொண்டபின் மண்டபத்தாரர் வெற்றிலை பாக்கு ரொக்கச்செலவு ஸ்தானிகாளுக்கு செய்தபீன் பகல் 11 மணி அளவில் பெருமாள் ஆனந்தராயர் பல்லக்குடன் புறப் படும் சமயத்தில் ஸ்ரீ ரெ. பட்டர், அ.பட்டர், அமுதார், திருமலை நம்பீகள், தியாகüசெய்த அமுதார் இவர்களுக்கு கோரா அருதிப் பரிவட்டம் மரியாதையாகி பெருமாள் ராமாராயர் மண்டபத்தை விட்டு புறப்பாடாகி வழிநடைமண்டபங்களில் பெருமாள் எழுத்தருளி மண்டபதார்களுக்கு மரியாதை செய்வித்து ஆழ்வார்புரம் அம்மாளு அம்மாள் பண்டபத்தில் சுமார் 4 மணிக்கு பெருமாள் தங்கி பக்தர் களுக்கு சேவை சாதித்து ஷே மண்டபத்திலிருந்து ஸ்ரீசடாரியை மீ வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளச் செய்து அதற்கு வேண்டும் பரி வாரங்களுடன் திருமலைராயர் படித்துறையை அடுத்து அய்யங்கார் மண்டபத்தில் 46 சடாரியை எழுந்தருளச் செய்து திருமஞ்சனம், திரு வாராதனம், தளிகை அமுதுசெய்து மண்டபதாரருக்கு மரியாதை செய்வித்து திரும்ப சடாரியை ஓடி பல்லக்குடன் பெருமாள் எழுந் தருளியிருக்கும் மண்டபத்திற்கு எழுந்தருளச்செய்து பின்பு மண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/373&oldid=1468256" இலிருந்து மீள்விக்கப்பட்டது