பக்கம்:அழகர் கோயில்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

370 அழகர்கோயில் 30. வந்தவர்கள்-ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக்களைந்த மாலையினை அங்கிருந்து நடந்தே கொண்டு வந்தவர்கள். 31. கோயிற்பணியாளர் வீட்டு மண்டகப்படிக்கு மண்டபக்காணிக்கை கிடையாது. 32. வையாளி- இறைவன் குதிரைபாய்ந்து செல்வது போலச் சப் பரத்தைச் சப்பரம் தூக்குவோர் அசைத்தல், 33. ஆயிரம்பொன் சப்பரம்-சப்பரத்தின் பெயர். 34. தண்ணீர் பீச்சுகிறவர்கள்-'சித்திரைத்திருவிழாவில் நாட்டுப் புறக்கூறுகள்' என்னும் இயல் காண்க. 35. குங்கப்பிர த க்ஷணம் - கையில் ஒரு தேங்காயுடன் தரையில் உருண்டு வால். 86. திருபட்டர்-ஏறுதிருவுடையான்பட்டர். 37 பத்தி உலாத்தி - இறைவன் நடையிடுவது போலச் சப்பரத்தைப் பக்கவாட்டில் அசைத்தல். 38. தேனூர் மண்டபம்-தேனூர் மக்களுக்கு உரிமையானதால் இப் பெயர் பெற்றது. 39. கோயில் தலபுராணத்தின் ஒரு பகுதியாக உள்ளது. 40. திருவிழாவிற்காக ஆற்றுமணலில் சிறிய அளவில் தோண்டப் பட்டுள்ள குழியினையே 'மடு' எனக் குறிக்கின்றனர். 41. பண்டாரி-கோயிலில் திருமாலை கட்டுபவர், ஸ்தானிகர் அறு வரில் ஒருவர். 42. முத்தங்கி -முத்துக்கல் வைத்துத் தைக்கப்பட்டுள்ள சட்டை. 43. ஆனந்தராயர் பல்லக்கு-பல்லக்கின் பெயர்; ஆனந்தராயர் என் பார் இப்பல்லக்கினைச் செய்தளித்திருக்க வேண்டும். 44. ஸ்தானிகரள். அர்ச்சகர். திருமலைநம்பி, அமுதார், ஜீயர், பண்டாரி. கணக்கு ஆகிய அறுவரும் ஸ்தானிகர் எனப்படுவர். 45. ஸ்ரீசடாரி-இறைவனின் திருவடியாகக் கருதப்பட்டு அடியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/377&oldid=1468260" இலிருந்து மீள்விக்கப்பட்டது