பக்கம்:அழகர் கோயில்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிற்சேர்க்கை II : 5 வெள்ளையத்தாதர் வீட்டுப் பட்டய நகல்ஓலை கூட்டறபட்டி என்னும் கூட்டுறவுபட்டி, சிவகங்கையிலிருந்து மேலூர் செல்லும் சாலையில் நான்குகல் தொலைவில் அமைந் துள்ளது. இவ்வூரிலுள்ள வெள்ளைச்சாமி குருக்கள் என்ற வெள்ளைச் சாமி அம்பலம் வீட்டில் திருமாலை ஆண்டாரால் தரப்பட்ட செம்புப் பட்டயமும் அதன் ஓலை நகலுமுள்ளன. பட்டயம் * × 7* நீள அகலமுள்ள கனத்த இரண்டு தனித்தனி செம்புத் தகடுகளில் இரு புறமும் எழுதப்பட்டுள்ளது. சில இடங்களில் எழுத்துக்கள் தேய்ந்து வாசிக்க முடியாதபடி உள்ளன. பட்டயத்தின் உரிமையாளர் அனுமதி தர மறுத்துவிட்டதால் ஆய்வாளர் பட்டயத்தைப் பார்க்க மட்டுமே முடிந்தது. பட்டய நகல் ஓலை 13′′ × 1 3/4* நீள அகலத்தில் ஆய்வாளரால் இந்நகல் ஓலை, பெற்றது. நான்கு எடுகள் கொண்டது; இருபுறமும் எழுதப்பட்டுள்ளது. 31, 1979 அன்று படியெடுக்கப் பட்டயம் சிவகங்கை மன்னர் முத்துவடுகனாத துரையினைக் குறிப்பிடுகிறது. இவரது காலம் கி.பி. 1750 முதல் கி. பி. 1772 வரை ஆகும். எனவே இப்பட்டயத்தின் காலமும் இதுவேயாகும். திருமாலை ஆண்டார். பட்டர் ஐயங்கார் ஆகிய இருவர்க்கும் ஏற்பட்ட பூச லொன்றினைப் பட்டயம் குறிப்பிடுகிறது. கி.பி. 1656 இல் எழுந்த அழகர்கோயில் கல்வெட்டு ஒன்று திருமாலை ஆண்டாருக்கும் பட்டர் ஐயங்காருக்கும் தீர்த்தமரியாதை பெறுவதில் ஏற்பட்ட வழக் கொன்றில் குப்பையாண்டி செட்டி, வைத்தியநாதையன், வசந்த ராய பிள்ளை. திருவேங்கடஐயன் ஆகியோர் நடுவர்களாக இருந்து தீர்ப் பளித்ததைக் குறிப்பிடுகிறது.2 எனவே பட்டயம் குறிப்பிடும் பூசல் ஒரு நூற்றாண்டாகத் தொடர்ந்து நடந்த பூசலின் தொடர்ச்சியே யாகும் என அறியலாம். 1. ந.சஞ்சீவி,மருதிருவர், பாரிநிலையம், சென்னை, 1956, ப. 53. 2. A. R. E. 286 of 1930.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/379&oldid=1468263" இலிருந்து மீள்விக்கப்பட்டது