பக்கம்:அழகர் கோயில்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கியங்களில் அழகர்கோயில் 31 மராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) ஆகிய ஊர்களில் வைணவக் கோயில்களில் திருமாலுக்கு 'அழகர்' என்ற பெயர் வழங்கிவருகின்றது. *மலை வள்ளல்' என்று ஓரிடத்தில் இப்பாடல் குறிப்பதால், மேற்குறித்த ஊர்களில் அழகர்கோயில் ஒன்றே மலைப்பதியாக அமைந்த ஊராதலால் இப்பாடல் இக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறை வனையே குறிக்கிறது எனலாம். ஆயினும் இப்பாடலின் பின்பாதி யான பதினான்கு அடிகளில் *சுடர்ப் பெருங் கடவுள்', 'சைவ சிகா(மணி)', 'பனைக்கை வெண்மருப்பு' முதலிய, தொடர்கள் சிவபெருமானையும், கணபதியினையும் குறிப்பதாக அமைகின்றன. கடைசி அடி, 'துறைவன் திருமகளே சரணம் என முடிகிறது. இவை எழுதுவோராலோ, எடுகள் சிதறிக் கிடந்ததாலோ வேறொரு பாடலின் அடிகள் இப்பாடலுள் புகுந்துவிட்டனவோ என்ற ஐயத்துக்கு இடமளிக்கின்றன. அடையாறு உ.வே.சா. ஏட்டுச்சுவடி நூலகத்தில் 'அழகம் பெருமாள் வண்ணம்•13 என்னும் பெயருள்ள ஒரு நூல் ஏட்டுச்சுவடி யாக உள்ளது. ஆய்வாளர் இச்சுவடியை முழுவதும் படித்தறிந்த போது அழகர்கோயில் பற்றிய குறிப்புக்கள் ஏதும் இந்நூலில் காணப்படவில்லை. மாறாக, 'தென் குலசை யூரதிபா செங்கண் நெடுமாலழகா என்பது இத்நூலிலுள்ள ஒரு பாடலில் வரும் விளியாகும். எனவே இது குலசை என்னும் ஊரிலுள்ள அழகர் எனும் பெயர் பூண்ட திருமாலின் மீது பாடப்பட்டதெனத் தெரிகிறது. 'தென்குலசை' எனத் திசையினையும் சுட்டுவதால், நெல்லை மாவட்டத்துக் குலசேகரன்பட்டிளமாகவோ, குமரி மாவட்டத்துக் குலசேகரமாகவோ இவ்வூர் இருக்காலம். மதுரை மாவட்டத்து அழகர்கோயில் அன்று என்பது தெளிவு. அழகர்கோயிலைப் பற்றிக் காலந்தோறும் எழுந்த இலக்கியங் களின் பரப்பினால், இக்கோயில் சமூகத்தோடு கொண்டிருந்த தொடர்பின் தன்மையை ஒருவாறு அறியலாம். 3.2. இலக்கியங்களும் மலைப்பெயரும் : 'நெடுங்குன்றம் எனப் பொதுவாக மலைகளைக் குறிப்பிடும் பரிபாடற் புலவர் இளம்பெருவழுதியார், இருங்குன்றம், ஓங்கிருங் குன்றம், ஐயிருங்குன்றம், மாலிருங்குள்றம். சீர்கெழுதிருவிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/38&oldid=1467896" இலிருந்து மீள்விக்கப்பட்டது