பக்கம்:அழகர் கோயில்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கியங்களில் அழகர்கோயில் கேசரி தினம்பூ, ஜிந்த கீர்த்தியினால் கேசரி மலையெனக் கிளற்றுவ ரெவரும் வாசவனிரவில் வந்து போற் றிடறால் வாசவுத் யான மலையெனப் பகர்வார்19 $$ பெயர்களை அழகர் குறவஞ்சி கூறும். அழகர் என்று மூன்று கிள்ளைவிடு தூது, ஏத்திருவர் நீங்கா திருக்கையாலே தேச வாத்திரி யென்னு மணிபெற்றுக் கோத்திரமாம் வெங்காத் திரியென்னுஞ் சீர்மருவி என இரு பெயர்களைக் குறிப்பிடும். இம்மலையை இதரபர்வதய் கள் அதனதன் குணவிசேஷங்களால் ஐயிக்கப்படாமலிருப்பதால் 'ஸிம்ஹாத்ரி' என்று ப்ரஸித்தமாயிற்று. மேலும் ஸ்ரீகேசவருடைய ஸாந்நித்யத்தால் இது 'கேசவாத்ரி' என்றும் கருதப்படுகிறது 21 என்பது தலபுரானம் தரும் விளக்கமாகும். மேலும் இம்மலை யானது ஸ்கல பாபங்களையும் அடியோடு துலைப்பதால் ஸவநாத்ரி (யக்ஞபர்வதம்) என்று ஒரு பெயரை அடைந்திருக்கிறது"22 என்பது தலபுராணம் தரும் மற்றொரு செய்தியாகும். 'ஸவநாத்ரி' என்ற பெயரைத் தலபுராணம் மட்டுமே குறிக்கிறது. 'வாசவித்யானமலை' என்ற பெயரை அழகர் குறவஞ்சி மட்டுமே குறிக்கிறது. கேசவாத்திரி, சிம்மாத்திரி ஆகிய பெயர்களுக் குச் சிற்றிலக்கியங்கள் தாம் கருதிய விளக்கத்தைத் தர முற்பட் டிருக்கின்றன. இப்பெயர்ப்பிறப்பின் காரணத்தைக் காட்டும் கதை ஏதும் வழக்கிலுமில்லை; தலபுராணத்திலும் காணப்படவில்லை. 3.3. 'வீடைமலை' எனும் பெயர் : இம்மலைக்கு, மேற்குறித்த பெயர்கள் தவிரப் பெருவழக்குப் பெற்றுள்ள புராணப்பெயர் 'விருஷபாத்ரி' என்பதாகும். ரிஷ பாத்திரி, இடபகிரி, இடபமலை, விடைமலை எனப் பல்வேறு வடிவங்- களில் வழங்கும் இப்பெயராலேயே இக்கோயில் தலபுரணம், 'விருஷபாத்ரி மகாத்மியம்' என வழங்கப்படுகிறது. இப்பெயர்ப் பிறப்பின் காரணம் ஆய்வுக்குரிய செய்தியாகும். அழகரந்தாதி ஏழு இடங்களில் 'விடைமலை' என்று இம்மலையினைக் குறிக்கின்றது 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/40&oldid=1467898" இலிருந்து மீள்விக்கப்பட்டது