பக்கம்:அழகர் கோயில்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 அழகர்கோயில் திருமாலிருஞ்சோலை பிள்ளைத்தமிழ், செங்கீரைப் பருவப் பாடல்களிரண்டில் 'அழகமலைத்துரை' என்றும், முத்தப்பருவத்தில் மூன்று பாடல்களில் 'மோகனத்துரை' என்றும் குறிக்கிறது. 33 அழகர் பிள்ளைத்தமிழில் 'அழகன்' என்ற பெயரே மிகுதியும் வழங்குகிறது. கன்னர் சமூகத்தவர் தொடர்புக்குப் பின்னர் இக்கோயில் இறைவன் 'கள்ளழகர்' என்றும் அழைக்கப்படுகிறார். இருப்பினும் இந்தலம் குறித்த கலம்பகம், தூது, இரு குறவஞ்சி நூல்கள். இரு பிள்ளைத்தமிழ் நூல்கள், அந்தாதி ஆகியவற்றில் இப்பெயர் காணப் பெறவில்லை. அழகர்மாலை 'கள்ளழகா என இருமுறை விளிப்பதோடு 'கள்ளர்க்குரிய அழகப்பிரான்' என அப்பெயரின் விளக்கத்தையும் தருகிறது. 31 'கருமை அழகுக்குறையுள்'33 எனக் கருமையழகினை விதந்து பாராட்டி, அழகினில் ஒப்பிலியே′36 என்றும் விளக்குகிறது. மலையழகன், கலையழகன், கருத்தழகன்,கனிவழகள், அலையழகன், கடலழகன், அருளழகன், சிலையழகன்37 ஆகியவை இத்தலத்திறை வனுக்கு அழகர்மாலை சூட்டும் பெயர்களாகும், வைணவம் அழகுணர்ச்சி மிக்க மதமாகும். ஆய்ப்பாடிக் கண்ணனின் குழந்தை விளையாட்டுக்கள் இவ்வுணர்ச்சி பெருகிவளரத் துணை செய்தன. வைணவ உரையாசிரியர்களும் அழகுணர்ச்சியினை வளர்த்து, வழிபடு பொருளாக்கினர்.அர்ஜுநனுக்கு தேசந்தாலே ஸம்ஸயத்தை அறுத்தான்; அத்தனை அளவில்லா தார்க்கு அழகாலே ஸம்ஸயத்தை அறுத்துக்கொண்டு வந்து "தோன்றும் என்பர் பெரியவாச்சான்பிள்ளை. 38 'இறைவனின் அருள், அழகினை வழியாகக் கொண்டு வெளிப்படும்' எனும் இத்தகைய உணர்ச்சி நிறைந்த நம்பிக்கைகளே இறைவனை காட்டும் பெயர் வழக்குகளைத் தோற்றுவித்தன அழகனாகக் எனலாம். இத்தலத்திறைவனுக்குப் பாசுரங்களில் காணாத ஒரு பெயரினை அந்தாதியும் கலம்பகமும் முதல் முறையாகக் குறிக் கின்றன. தெய்வ சிகாமணி" எனும் பெயரை அந்தாதி ஓரிடத்திலும், கலம்பகம் இரண்டிடங்களிலும் குறிக்கின்றன. SP இப்பெயர்ப் பிறப்பின் காரணம் தெரியவில்லை; கண்டறிய வேறு சான்றுகளும் கிடைக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/43&oldid=1467901" இலிருந்து மீள்விக்கப்பட்டது