பக்கம்:அழகர் கோயில்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கியங்களில் அழகர்கோயில் 3.5. நின்ற திருக்கோலம் : 37 இந்தலத்துறையும் திருமாலை நின்ற கோலத்தவனாக இலக் கியங்கள் காட்டுகின்றன. கருவறையில் இறைவன் நின்ற கோலத் திலேயே உள்ளார். இத்தலம் குறித்த பரிபாடலில் 'அமர்நிலை என்ற தொடர், அமர்ந்த (இருந்த) கோலத்தைக் குறிப்பிடுவது போலத் தோன்றினாலும், பரிமேலழகர், 'அமர்ந்து நிற்கும் நிலை என்றே உரையெழுதுகிறார்.40 "அமர்' என்ற சொல் விருப்பத்தையும் குறிக்கும். எனவே 'விரும்பி நிற்கும் நிலை' என்பதே பரிமேலழகர் கருத்தாகும். அதுவே பொருத்தமுடையதாகவும் தோன்றுகிறது. திருமாலிருஞ்சோலை நின்றான்' என்ற பெயர் ஆழ்வார்களின் பரசுரங்களில் பல இடங்களில் வழங்கப்படுகிறது. 3.6. விமானப்பெயர் :

  • சோமசந்திர விமானம்' எனும் பெயருடைய இக்கோழில் விமானம் அடிநிலை முதல் தூபிவரை வட்டவடிவமானது. பாசுரங் களில் இவ்விமானம் பற்றிய குறிப்பில்லை. சிற்றிலக்கியமான அழகர் கலம்பகமே இப்பெயரை முதன்முதலில் குறிக்கின்றது. 41 சிற்றிலக்கியமான அழகரந்தாதி இப்பெயரைக் குறிப்பிடவில்லை.

3.7. தலவிருட்சம் : இக்கோயிலுக்கு நான்கு யுகங்களிலும் நான்கு தலவிருட்சங்கள் அமைந்ததென்பர். இச்செய்தியைக் கிள்ளைவிடு தூதும்,இருகுறவஞ்சி நூல்களும் குறிக்கின்றன. "வடம் அரசு கூவிளமாய் வண்புத்ர தீபகமாய்த் தடம் மருவு சதுருகங்கள் தனிலும் ஒரு தருவுண்டு 42 எனச் சோலைமலைக் குறவஞ்சி கூறும். அழகர் கிள்ளைவிடு தூதும் இச்செய்தியைக் கூறுகின்றது.43 ஆனால் அழகர் குறவஞ்சி கிருதயுகத்தில் ஆலமரமும், திரே நாயுகத்தில் அரசமரமும், துவாபரயுகத்தில் சோதிமரமும் எனக் கூறி, கலியுகத்தில் தலவிருட்சம் எது என்பதைக் கூறாமல் விட்டுவிடுகிறது. 44 சோலைமலைக் குறவஞ்சியும், கிள்ளைவிடு தூதும் துவாபரயுகத்தில் கூளிளமரமும். கலியுகத்தில் சோதிமரமும் தலவிருட்சங்கள் எனக் குறிப்பிடுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/44&oldid=1467902" இலிருந்து மீள்விக்கப்பட்டது