பக்கம்:அழகர் கோயில்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 அழகர்கோயில் தலவிருட்சங்களைப் பற்றிய குறிப்பு இத்தலம் குறித்த பாசுரங்களிலும், அழகரந்நாழி, அழகர் கலம்பகம் ஆகிய நூல்களிலும் காணப்பட வில்லை. 3.8.நதியின் பெயர் : இம்மலையில் பிறக்கும் சிலம்பாற்றினைப் பரிபாடலும், சிலப் பதிகாரமும் 'சிலம்பாறு' என்றே குறிக்கின்றன. இதே பொருளில் இப்பெயர் 'தூபுரகங்கை' எனவும் வழங்கப்படுகிறது. அழகர் கலம் பகம் 'மஞ்சீரநதி' எனவும் இந்ததியினைக் குறிப்பிடுகின்றது.6 கோயில் தலபுராணமோ இன்னும் மூன்று பெயர்களை இந்ததிக்கு. இட்டு அப்பெயர்களை விளக்கவும் செய்கிறது. "இம்மலையின் சிகரத்தில் ஸ்ரீமந்நாராயணமூர்த்தியின் பாதச் சிலம்பிலிருந்து பெருகியதான ததி ஒன்றுண்டு... புண்யத்தைத் தருகிறதும் இசு பரசுகத்தைத் தருவதாகவும் இருத்தலால் இந்நதிக்கு 'இஷ்டஸித்தி* என்று ப்ரஸித்தமுள்ள மற்றொரு பெயரும் உண்டு... ஆச்ரயிரத் தவர்களின் புண்ணியத்தை அபிவிருத்தி செய்வதால் 'புண்யச்ருதி' என்ற மற்றோர் பெயருடனும், ஸகல ஜனங்களுடைய ஜனனமரண துக்கத்தினை நீக்கக் கூடியதால், 'பவஹாரீ நதி' என்ற மற்றும் ஒரு பெயருடனும் இந்த 'நூபுரகங்கா' நதியானது விசேஷக்யா நியுடன் ப்ரவற்றிக்கிறது”46. பலகாரணி. இட்டசித்தி, புண்ணிய சரவணம் எனும் பெயகுடன் இம்மலையில் மூன்று பொய்கைகள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறும்.47 ஆழ்வார்களின்' பாசுரங்களிலோ சிற்றிலக்கியங்களிலோ இச்செய்தி காணப்படவில்லை. எனவே தலபுராண ஆசிரியர் இப் பெயர் வழக்குகளைச் சிலப்பதிகாரத்திலிருந்தே பெற்றிருக்கக்கூடும். சிலப்பற்காரம் குறிக்கும் பெயரோடு பொய்கைகள் எவையும் இப்போது இம்மலையில் இல்லை. எனவே தலபுராண் ஆசிரியர் இப்பொய்கைப் பெயர் வழக்குகளைச் சிலம்பாற்றின் பெயராகக் கொண்டார் போலும். பவகாரணி எனச் சிலப்பதிகாரம் குறிப்பதை 'பவஹாரீ நதி" என்கிறது. தல்புராணம்; 'புண்ணிய சரவணம்' எனும் பெயரை 'புண்மச்ரு' என்கிறது. 'பவஹாரி நதி' என்ற பெயர் மாற்றத் துக்கான காரணம் புலப்படவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/45&oldid=1467903" இலிருந்து மீள்விக்கப்பட்டது